பணக்கார இந்தியர்கள் 2017

பணக்கார இந்தியர்கள் 2017 என்ற பட்டியலை
ஹூரன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 10 இடம் பெற்றுள்ளவர்கள் யார் எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

இடம்

பெயர்

சொத்து (கோடிகளில்)

1

முகேஷ் அம்பானி 175,400

2

எஸ்.பி.ஹிந்துஜா குடும்பம் 101,000

3

திலீப் சங்வி 99,000

4

பல்லோஞ்சி மிஸ்ட்ரி 82,700

5

லட்சுமி மிட்டல் 81,800

6

 ஷிவ் நாடார் 81,200

7

சைரஸ் பூனவாலா 75,400

8

அஜிம் பிரேம்ஜி 66,300

9

உதய் கோடக் 49,200

10

டேவிட் ரூபன் 45,600

10

சிம்சன் ரூபன் 45,600

 

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி 1,75,400 கோடி ரூபாய் (26 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பினைப் பெற்று இந்தியாவின் முதலாவது பணக்காரர் உள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்லாது உலக பணக்காரர் பட்டியலில் 36 இடத்தில் உள்ளர். இவர் 1957-ல் ஏமனில் பிறந்தார். இவரின் பெற்றோர் திருபாய் அம்பானி மற்றும் கோகிலா பென் ஆகியோர் ஆவர். இவர் பி.இ. கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.

இவர் இந்தியாவின் முக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் லிமிடெட் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரர் (44.7%) ஆவார்.

இந்நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, பெட்ரோ கெமிக்கல்ஸ் ஒப்பந்தங்களை நிர்வகிக்கிறது.

தகவல் தொடர்பு துறையில் இந்தியாவின் முன்னனி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராகவும் இவர் உள்ளார். தற்போது ஜியோ தகவல் தொடர்பு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

எஸ்.பி.ஹிந்துஜா குடும்பம்

எஸ்.பி.ஹிந்துஜா குடும்பம் 101,000 கோடி ரூபாய் (14 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பினைப் பெற்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

90 வருட பழமை வாய்ந்த இந்நிறுவனம் நான்கு சகோதரர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

அசோக் லேலண்ட், இன்டஸ் இன்ட் வங்கி, வளைகுடா எண்ணெய் கார்ப்பரேசன், ஹிந்துஜா டெக் லிமிடெட் போன்றவை எஸ்.பி.ஹிந்துஜா குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் முக்கிய நிறுவனங்களாகும். இந்நிறுவனம் உலகின் பல நாட்டுகளில் லாபகரமாக இயங்கி வருகிறது.

 

திலீப் சங்வி

திலீப் சங்வி 99,000 கோடி ரூபாய் (14 பில்லியன்) சொத்து மதிப்பினைப் பெற்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இவர் 1955-ல் குஜராத்தில் உள்ள அமரேலியில் பிறந்தார். இவர் கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

பின் தந்தையாரின் மருந்துகள் விற்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். சிறிது காலத்திற்குப் பின் 1982-ல் பிரதீப் கோஸ் என்பவருடன் இணைந்து சன் பார்மசூட்டிக்கல்ஸ் என்ற மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

தற்போது இந்நிறுவனத்தில் 53,000 பேர் வேலை பார்க்கின்றனர். இந்நிறுவனம் உலகில் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஐந்தாவது பெரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்க ஐக்கிய நாடுகள், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் மருந்து வர்த்தகம் செய்து வருகிறது.

 

பல்லோஞ்சி மிஸ்ட்ரி

பல்லோஞ்சி மிஸ்ட்ரி 82,700 கோடி ரூபாய் (12 பில்லியன்) சொத்து மதிப்பினை பெற்று இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் 1929-ல் பிறந்தார்.

இவரின் சிறுவயதில் இவருடைய தந்தை டாடா சன்ஸ் குழுமத்தின் 18.4% பங்குகளை வாங்கி இருந்தார். இவர் ஷேர்பூஞ்சி பல்லோஞ்சி குழுமத்தின் தலைவர் ஆவார். இந்நிறுவனம் கட்டுமானம், ரியல் எஸ்டேட், பயோ டெக்னாலஜி போன்ற தொழில்களை நிர்வகிக்கும் கூட்டுக்குழுமமாகும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹாங்காங் பாங்க், ஷாங்காய் பாங்க் போன்ற கட்டங்கள் இவரின் கட்டுமான நிறுவனத்தின் புகழை எடுத்து இயம்புகின்றன. இவர் தற்போது அயர்லாந்தில் வசித்து வருகிறார்.

 

லட்சுமி மிட்டல்

லட்சுமி மிட்டல் 81,800 கோடி ரூபாய் (12 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பினை பெற்று இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் நிப்பான் டென்ரோ இஸ்பேட் என்ற இரும்புக் கம்பெனியின் தலைவரான மோகன் லால் மிட்டல் என்பவருக்கு மகனாக‌ 1950-ல் பிறந்தார்.

இவர் ஆர்ஸ்லர் மிட்டல் என்ற இரும்பு உற்பத்தி கம்பெனியின் தலைவராக உள்ளார். கோல்ட்மேன் சாக்ஸ், ஏர்பஸ், வேல்ட் ஸ்டீல் அசோசியேசன் உள்ளிட்ட நிறுவன‌ங்களின் இயக்குநராகவும் உள்ளார்.

 

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார் 81,200 கோடி ரூபாய் (12 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பினைக் கொண்டு இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

இவர் 1945-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார். இவர் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸில் பி.இ பட்டம் பெற்றார். ஆரம்பத்தில் மைக்ரோகோம்ப் என்ற நிறுவனத்தை தன் நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார்.

கால்குலேட்டரைத் தயாரித்து விற்பனை செய்வதை இந்நிறுவனம் செய்து வந்தது. பின்னர் எச்சிஎல் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் இந்தியாவின் பெரிய கம்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் தற்போது 34 நாடுகளில் உள்ளது. இவர் 1990 முதல் இந்தியாவின் கல்விக்காக பாடுபட்டு வருகிறார். இவர் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு பணம், பொருள் உதவிகள் செய்து வருகிறார்.

 

சைரஸ் பூனவாலா

சைரஸ் பூனவாலா 75,400 கோடி ரூபாய் (11 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பினை பெற்று இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். பூனவாலா என்ற குழுமத்தின் தலைவராக உள்ளார்.

இந்நிறுவனம் இந்தியாவின் தடுப்பூசியின் மன்னன் என்றழைக்கப்படுகிறது. இந்திய சீரம் இன்ஸ்டியூட் என்ற பயோ டெக் நிறுவனத்தை பூனவாலா குழுமம் பெற்றுள்ளது.

இந்திய சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் உலகில் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஆகும். இவர் உலகில் உள்ள குழந்தைகளின் நோய்களைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டினார். இவர் இந்தியாவின் நான்காவது பெரிய விருதான பத்ம ஸ்ரீ-யைப் பெற்றுள்ளார்.

 

அஜிம் பிரேம்ஜி

அஜிம் பிரேம்ஜி 66,300 கோடி ரூபாய் (9.7 பில்லயன் டாலர்) சொத்து மதிப்பினைப் பெற்று இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். இவர் 1945-ல் முகமது பிரேம்ஜி என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.

இவருடைய தந்தை காய்கறிகளால் செய்யப்படும் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்காவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டத்தைப் பெற்றார்.

தந்தையின் மறைவுக்குப் பின் தந்தையின் தொழிலைத் தொடர்ந்த இவர் சோப்பு மற்றும் ஹைட்ராலிக் சிலிண்டர் தயாரிப்புகளை தொடங்கினார்.

தற்போது விப்ரோ லிமிடெட் என்ற ஐடி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். விப்ரோ லிமிடெட் நிறுவனம் உலகின் ஏழாவது பெரிய ஐடி நிறுவனமாக கணிக்கப்பட்டுள்ளது.

 

உதய் கோடக்

உதய் கோடக், கோடக் மஹிந்திரா வங்கியின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் நிதி சார்ந்த பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

2003 ஆம் ஆண்டு கோடக் மஹிந்திரா வங்கியை தொடங்கினார். தனியார் வங்கிகளில் சந்தை மதிப்பின்படி மூன்றாவது இடத்தில் அது இருக்கின்றது.

 

டேவிட் ரூபன் சிம்சன் ரூபன்

இவர்கள் இருவரும் 70 வயதைக் கடந்த‌ சகோதரர்கள். இருவரும் தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்கள். இவர்கள் அலுமினியம் மற்றும் உலோகம் சம்பந்தமான தொழில்களில் தொடர்புடையவர்கள்.

தற்போது இருவரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.