பீத்தோவன்- மரணத்தை இசையால் வென்றவர்

காது கேளாமை, டைபஸ் எனும் ஒருவகையான தொற்று, இருமுனையப் பிறழ்வு எனும் மனநோய் இப்படி பல நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுற்றவர் அவர்.

தனது இருபத்தி ஆறாவது வயதில், காதில் ஏற்பட்ட கடுமையான நோயால் சின்ன சத்தத்தைக் கூட கேட்கவே முடியாமல், தான் பேசும் பேச்சுகூட அவருக்கு க் கேட்க முடியாத அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

வலியைப் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர்.

தன்னுடைய பேச்சு சத்தமே தன்னுடைய காதுக்கு பெரிய இரைச்சலாக அமைந்த காரணத்தால் பேசுவதை நிறுத்திக் கொண்டவர்.

வாய் பேசாத, காது கேளாத நிலைகளிலிருந்தும் இவ்வுலகிலுள்ள மக்கள் அனைவரையும் தன்னுடைய இசையால் சுவீகரித்தவர்.

இவர் உருவாக்கிய இசை தான் இன்று இசை உலகில் பேசுப்பொருளாக மாறி இருக்கிறது. அவர்தான் இசை உலகில் பேரரசனாக கடவுளாக போற்றப்படும் பீத்தோவன்.

பீத்தோவன் பெயர் சொல்லும் படைப்புகள் அனைத்தும் அவர் கேட்கும் சக்தியை இழந்த பிறகு உருவானவை.

‘பீத்தோவன் என்றால் சிம்போனி. சிம்பொனி என்றால் பீத்தோவன்’ என்று அகராதியில் இடம் பெறும் அளவிற்கு இன்று உயர்ந்து நிற்கிறார்.

Symphony என்பது ஓர் இசையைப் பற்றிய சொல். இந்த சொல் கிரேக்க மொழியின் வேர்ச்சொல்லில் (Root) இருந்து தோற்றம் பெற்றது. இச்சொல்லுக்கு பெருமை சேர்த்தவர் தான் லூட்விக் வான் பீத்தோவன். அவர் ஒரு ஜெர்மானியர்.

ஜெர்மனியில் உள்ள பான் என்னும் ஊரில் பிறந்தவர். யோகன் பீத்தோவன், மரியா மற்றும் மாக்டலேன் என்ற பெற்றோருக்கு 16.12 .1770 ஆம் ஆண்டு பிறந்தவர்.

பீத்தோவன் அப்பா யோகன் பீதோவன் ஓர் இசைக்கலைஞர் மற்றும் இசையாசிரியர். அவருடைய அப்பாவும் அதாவது பீத்தோவனின் தாத்தாவும் இசை ஆர்வலர்.

அதனால் அவருக்கு இயல்பாக இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

மக்களிடம் இசையின் ஆர்வத்தை தூண்டி ரம்மியமான இசையை ரசிக்கும்படி செய்தவர் பீத்தோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால்தான் ஆண்டு தோறும் வியனாவுக்கு செல்லும் பல்லாயிர சுற்றுலாவாசிகள் அனைவரும் Grave of Honor என்ற பீத்தோவனின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தாமல் போவதில்லை.

புதன் கோளின் மீதுள்ள மூன்றாவது பெரிய கிண்ணக்குழிக்கு பீத்தோவன் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய நினைவாக 1845 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பான் நகரில் பீத்தோவன் நினைவு சின்னம் திறந்து வைக்கப்பட்டது. ஜெர்மனியில் ஓர் இசை அமைப்பாளருக்காக உருவாக்கப்பட்ட முதல் சிலை இது.

மேலும் 1845ஆம் ஆண்டு முதல் ஒரு இசை விழா, பீத்தோவன் இசை விழா என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

சிம்போனி என்கின்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஒத்தினியம் என்று தமிழில் அழகாக மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக பியானோ இசைக் கருவிகளோடு இந்த ஒத்தினியம் தொடர்புடையது. வழக்கமாக 3 அல்லது 4 பகுதிகளுக்கு நீளமான நடையில் நோட்ஸ் இருக்கும்.

ஆனாலும் ஒத்தினியம் என்று அழைக்கப்படும் சிம்போனி எழுதுவதற்கு பல முறைகள் இருந்தாலும், சிம்போனியின் தந்தை ஜோசப் ஹேடன் எழுதியதை பின்பற்றி, பின் வந்த இசை அமைப்பாளர்கள் பலரும் சிம்போனி எழுதினர்.

ஜோசப் ஹேடன் வூல்ஃ ப்கான்ங், அமடியஸ், மொஸார்ட், பிராண்ஸ் ஆன்டர் புரூக்கர், ஜெகாகான்னெஸ் பிராம்ஸ், பியோட்டர் சைகோவ்ஸ்கி, குஸ்தாவ் மாலர், ஜான் சிபெலியஸ் போன்றோர் சிம்பொனி இசையில் புகழ்பெற்ற மேதைகளாவர்.

இவர்களுள் பீத்தோவன் தனது மாடல்களை மொஸார்ட் மற்றும் ஹேடன் ஆகியோருடன் நேரடியாக இணைந்து இரண்டு படைப்புகளுடன் தொடங்கினார்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பீத்தோவன் தினசரி இசை வடிவத்திலிருந்து சிம்பொனி இசையை சில எண்ணிக்கையில் இருந்து பெருமளவு உயர்த்தினார்.

இசையமைப்பாளர்கள், மிகச் சில படைப்புகளின் இசையிலேயே மிக உயர்ந்த ஆற்றலை அடைய முயற்சித்துள்ளனர்.

இதன் பயன் இரண்டாம் உலகப்போரின் போது, சோர்ந்து போயிருந்த ஐரோப்பியர்களுக்கு எழுச்சியூட்ட உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனம் (BBC) என்ன செய்தது தெரியுமா?

பீத்தோவனின் எழுச்சியூட்டும் ஐந்தாவது சிம்போனி எனப்படும் இசைக் கூற்றின் ஒரு பகுதியைத் தன் செய்திகளுக்கும், அறிவிப்புகளுக்கும் முன் ஒளிபரப்பியது. இந்த இசையைக் கேட்ட போதெல்லாம் நலிந்திருந்த தேசமே புத்துயிர் பெற்றது.

பதினெட்டாம் நூற்றாண்டில் சிம்பொனி இசை மிகத்தீவிரமாக பயன்படுத்தப்பட்டது. கிருத்துவ தேவாலயங்கள் உட்பட பொது இடங்களிலும் முக்கியத்துவம் பெற்ற இசையாக பார்க்கப்பட்டது.

அந்தவகையில் 1757 ஆம் ஆண்டில் மொர்ஸின் குடும்பத்திற்கு ஓர் இசை இயக்குனராக தனது முதல் இசை பணியை எடுத்துக் கொண்டார்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பீதோவன் தினசரி சிம்பொனி எண்ணிக்கையை சில என்பதிலிருந்து பல என‌ பெருமளவில் உயர்த்தினார்.

இப்படி எழுச்சி மிக்க வரலாற்று நாயகரின் வரலாறு மிகவும் ஒரு துன்பியல் நிகழ்வாக அமைந்த‌து.

கடுமையான நோய்களுக்கு உட்பட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் எப்படி? தான் கேட்டு ரசிக்க முடியாத நிலையில் அவரால் மகிழ்ச்சி, காதல், சோகம், வேதனை, விரக்தி, வீரம், அச்சம், பக்தி என பல்வேறு பரிமாணங்களைத் தன் இசையால் வெளிக்கொணர முடிந்தது.

இசை ஒவ்வொரு மனிதனையும் பண்படுத்தும், பக்குவப்படுத்தும். இசை மனிதனின் தன்னம்பிக்கையின் அடையாளம். இசை மரணத்தின் விளிம்பில் இருப்பவரும் மறுவாழ்வு அளிக்கும்.

இசைக் கருவிகள் வெறுமனே ஜடப் பொருள்கள் அல்ல. இந்தக் காற்றில் எந்த மூங்கில் புல்லாங்குழல் ஆனது. இசை மனிதனின் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் உடன் இருப்பது.

மனிதன் மூலக்கூறு வாய்ப்பாடு இசை. மனிதனுக்கு மட்டுமன்றி விலங்குகள், பறவைகள் எழுப்பும் ஓசை இசையாக இருப்பதை அறிவோம். குயிலின் ஓசைக்கு இணையான இசை வேறு உண்டோ?

எந்த ஒரு மனிதனுக்கும் நெஞ்சுக்கு நெருக்கமாக ஏதோ ஒரு வகையில் ஓர் இசையோ அல்லது இசைக்கருவியோ இருக்கத்தான் செய்யும்.

அந்த வகையில் பீத்தோவன் வாழ்வில் இசையும், பியானோவும் இரண்டரக் கலந்த ஒன்று. அதனால் அது அவர் வாழ்வை மரணத்திலிருந்து மீட்டெடுத்தது.

அவர் மொத்தம் 56 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்துள்ளார். அதில் சரிபாதி வாழ்க்கை இசை தான் அளித்தது.

தன்னுடைய 26வது வயதில் தற்கொலைக்கு தூண்டப்பட்டு, மரணத்தை அணைத்துக்கொள்ள துடித்த ஒரு இளைஞனுக்கு, கால் நூற்றாண்டுக்கு மேலாக சிம்போனி மறுபடியும் வாழ்வதற்கு சொல்லிக் கொடுத்தது.

இசையால் தன்னிலை மறப்பவர் உண்டு. இசை சில இடங்களில் அதிகாரத்தின் உச்சமாகவும் திகழ்கிறது. ட்ரம்பெட் சத்தத்தில், மதுபோதையில் கேப்ரோ, டிஸ்கோ போன்ற நடனங்களில் மெய்மறந்து ஆடுவதையும் கவனிக்க முடிகிறது.

இசை சில இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில விடுதிகளில் பொழுதுபோக்கு இடங்களில் மது விருந்துகளில் மோகத்தை தூண்டி, வெறி கொண்டவர்களாக மாற்றி அரை நிர்வாணமாகப்பட்டு உல்லாசத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதையும் காண முடிகிறது.

இசை கேட்டும், வாசித்தும் பழகாத சமூகம் வன்முறை எண்ணங்களையே வெளிப்படுத்தும்.

அந்த வகையில் ஒவ்வொரு மனித வாழ்விலும், தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இசையோடு சங்கமித்திருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். நல்ல இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.

எ.பாவலன்
drpavalan@gmail.com

One Reply to “பீத்தோவன்- மரணத்தை இசையால் வென்றவர்”

  1. இசை ஒவ்வொரு மனிதனையும் பண்படுத்தும், பக்குவப்படுத்தும். இசை மனிதனின் தன்னம்பிக்கையின் அடையாளம். இசை மரணத்தின் விளிம்பில் இருப்பவருக்கும் மறுவாழ்வு அளிக்கும்.உண்மை தான்.

    கட்டுரை ஆழமானதாக அமைந்திருக்கிறது!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.