புதிர் கணக்கு – 14

“இந்தப்புதிர் குட்டிமான் மீன்விழிக்காகத்தான். ஆனாலும் யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்” என்ற மந்திரியார் புதிரை கூறலானார்.

யானையாரிடம் சில தேங்காய்களை உண்ண கொடுப்போம்.

அதைப்போல இரண்டு மடங்கு அவரின் தந்தைக்கு கொடுப்போம்.

அவனிடம் உள்ளது போல மூன்று மடங்கு தேங்காய்களை அவரது தாத்தாவுக்கு தருவோம். என்று வைத்து கொள்ளுங்கள்.

மூவரிடமும் உள்ளவற்றை கூட்டினாலும் பெருக்கினாலும் ஒரே எண்ணிக்கைதான் வரும் அப்படியானால் ஒவ்வொருவரிடமும் கொடுக்க வேண்டிய தேங்காய்கள் எத்தனை?

இதுதான் மீன்விழிக்கான இலகுவான புதிர்” என்று கூறிவிட்டு அமர்ந்தது.

குட்டிமான் மீன்விழி பேந்த பேந்த விழித்தது. “சுலபமானதாக கேட்கச் சொன்னால் இது சுலபமானதாக்கும்” என தனக்குள் முனுமுனுத்தது.

பத்து நிமிட நேரங்களுக்கு பின் எறும்பார் ஏழுமலை ஒரு விடையை கூறினார். அவரை தொடர்ந்து பூனையார் கருப்பண்ணும் விடையை கூறினார்.

அவரை தொடர்ந்து குட்டி எலி எலிக்கண்ணனும் அதே விடையை கூறியது மெதுவாக எழுந்த யானையாரும் அதே விடையை கூறினார்.
அனைவருமே ஒரே விடையை கூற என்ன பதில் சொல்வது என சிறிது திகைத்த மந்திரியார் பின்னர் சுதாரித்துக் கொண்டு பேசலானார்.

“எளிமையான கணக்காக இருப்பதால் எல்லோருமே விடை கூறி விட்டீர்கள் நீங்கள் கூறிய விடை சரியானதுதான்” பதில் கூறிய ஏழுமலை, கருப்பண்ணன், எலிக்கண்ணன், யானையார் ஆகிய அனைருக்குமே ஆளுக்கு பத்து மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன” என்றார்.

“இதற்கான விடையை பலர் கூறினர், எறும்பார், பூனையார், யானையார் என பலர் கூறினர்” என்று அறிவித்தது.

“அப்படியானால் பூனையாரை வரச்சொல்லுங்கள்” என்று வெட்டுக்கிளியார் கேட்டார்.

“பூனையாரை காணவில்லை” என்று பலர் பதில் கூறவும்.
“ஓ! காணவில்லையா எறுப்பாரை வரச்சொல்லுங்கள்” என்றார் வெட்டுக்கிளியார்.

“யானையிடம் கொடுத்த தேங்காய்கள் பற்றிய புதிர் இது இதன்படி முதலில் ஒருவருக்கு கொடுத்ததை போல 2 மடங்காக்கி கொடுத்ததையும் அவற்றை பெருக்கினாலும் கூட்டினாலும் ஒரே விடை என்றும் கூறப்பட்டது ஆக முதல் நபருக்கு 1 என்றால் இரண்டாம் நபருக்கு 2 என்றும் மூன்றாம் நபருக்கு 3 என்றும் வரும் இந்த விடைகளை பெருக்க 6 என்றும் கூட்டினாலும் அதே விடைதான் கிடைக்கும் எனவே இது சரியான விடையென கூறினேன்” என்று எறும்பார் கூறினார்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.