புனையுலக வெற்றியின் பதாகை

தமிழின் வெற்றிக்கொடியாக உலகம் முழுவதும் உலா வரும் இணையற்ற இணைய இதழ் “பதாகை” எனும் இணைய இதழாகும்.

மிகச்சரியான இலக்கியப் பாதையைச் சமைத்துக் கொண்டு, இலக்கிய ஆர்வலர்கள் போற்றும் வண்ணம் தரம் மிக்கதான படைப்புக்களை வெளியிடுவதைத் தன் நோக்கமாகக் கொண்ட சிறப்பை இவ்விதழ் பெற்றுள்ளது.

ஆழமான, அகலமான தரம்மிக்கதான தமிழ் மற்றும் பிறமொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்புப் படைப்புகளைப் படிக்க வேண்டுமானால், பதாகை இணைய இதழை நாடலாம். அவ்வளவு இலக்கியப் படைப்புகள் இங்கு நிறைந்திருக்கின்றன.

சமகாலப் படைப்புக்களை அறிவது என்பது ஒவ்வொரு படைப்பாளனின் முக்கியத் தேவையாகிறது. அதைத் தேடிப்பிடித்து அலைந்தாவது பெற வேண்டும். அப்போது தான் காலத்தின் பிடியில் நிலைத்து நின்று பெரும் பெயர் சம்பாதிக்க முடியும்.

அவ்வகையில், இப்படைப்புக்களைத் தேடுவது, முன்பெல்லாம் கடினமாக இருந்தன. நூல்கள் வழிப் பல மொழிப்படைப்புகளை அறிந்து, படித்து உணர்தல் வேண்டும்.

ஆனால், எந்தவிதமான அலைச்சலும் இல்லாமல், பதாகை இணைய இதழ் மூலம் சமகாலப்படைப்புக்களை ஒன்றுசேரப் படித்துப் பயன்பெற முடிகின்றது.

சிறப்பிதழ்கள் வெளியிடுவது இணைய இதழ்களின் ஒரு பணி என்றாலும், அதிதீவிரமான கட்டுரைகளும், புரிதல்களும், விமர்சனங்களும் பல்வேறு கோணங்களில் நெருங்கி ஆராயும் போக்கில் இவ்விதழ் சிறப்பிதழ்களில் கட்டுரைகள் காணப்படுகின்றன.

கவிதைகள் எனும் பகுதியில், ஒவ்வொரு இதழிலும் வெளியிட்ட கவிதைகளை ஒன்றுசேரக் காணமுடிகிறது. அதுபோல, சிறுகதைகள், பேட்டிகள், ”பிற” எனும் பகுதியும் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் காணப்படுகின்றன.

பேட்டி ஒவ்வொரு இதழிலும் பெரும்பாலும் காணப்படுகின்றது. மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் மூலமொழிப் பொருளைச் சிதைத்து விடாமல், அப்படியே தருவதற்கு முயற்சி செய்திருக்கின்றனர்.

விமர்சனம் என்ற பகுதியில் நூல்களைப் பற்றிய பயனுள்ள விமர்சனங்கள் கிடைக்கின்றன.

பிற பகுதியில் இவை தவிர்த்த பிற படைப்புகள் உள்ளன. உலக எழுத்தாளர்களின் பலரைத் துல்லிதமாக உணரவும், அவர்களின் கற்பனை மற்றும் உணர்வுப் பிரதிபலிப்பையும் காணமுடிகின்றது.

படைப்பின் உச்சத்தை அடைய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு படைப்பாளனும், தொடர்ந்து இவ்விணைய இதழைத் தொடர்ந்து படித்து வந்தால் போதும், படைப்பின் உச்சத்தை அடைந்து விடலாம்.

தளத்தின் பக்காவாட்டில், இதழ் ஆரம்பிக்கப்பட்ட மாதம் முதல் இன்றுவரை உள்ள இதழ்களின் பட்டியல் உள்ளது. அதைச் சொடுக்கினால் அந்த மாத இதழுக்குச் சென்றுவிடும். அம்ம்மாதப் படைப்புகளைப் படிக்கலாம்.

எழுத்தாளர்களின் பட்டியலும் உள்ளது. அதன் மூலமும் எளிதாக அந்த எழுத்தாளர்களின் படைப்புக்களையும் படித்துவிடலாம்.

மொத்தத்தில், நவீன இலக்கியம் படிக்கப் பதாகை இதழ் ஒன்றே போதும்.

கீழ்க்கண்டவாறு சிறப்பிதழ்கள் வெளியிடப் பெற்றுள்ளன. அவையாவன

• சு வேணுகோபால் சிறப்பிதழ்

• நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்

• பாவண்ணன் சிறப்பிதழ்

• சுரேஷ்குமார் இந்திரஜித் சிறப்பிதழ்

புனையுலக வெற்றியின் சின்னமான பதாகை இதழைப் படிக்க https://padhaakai.com எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

2 Replies to “புனையுலக வெற்றியின் பதாகை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.