புரோட்டா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

மாவு : ½ கிலோ

தேங்காய் எண்ணெய் : 300 மி.லி.

வெண்ணெய் : 1 மேசைக்கரண்டி

தண்ணீர்

உப்பு : 1 டீஸ்பூன்

 

செய்முறை

மாவைச் சலித்து பாத்திரத்தில் போட்டு வெண்ணெய் உப்பு இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீர் விட்டு ஒன்று சேரப்பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவு உருண்டைகளை விட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். (500 கிராம் மாவில் 8 புரோட்டா வரும்)

உருண்டைகளின் மீது தேங்காய் எண்ணெய் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். இந்த எண்ணெயயே புரோட்டா விரிப்பதற்கும் எடுத்துக் கொள்ளலாம்.

மாவு உருண்டைகளை, எண்ணெய் தடவிய பெரிய பலகையில் பூரிக்கட்டையில் மெல்லிய துணி போன்றிருக்கும் மாவை சேலைக்கொசுவம் மடிப்பது போல் குட்டிச் சுருக்கங்கள் செய்து அப்படியே இருபுறமும் சுருட்டிக் கொண்டு வந்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து விடவும்.

இவ்வாறு புரோட்டா இட்டபின் தோசை சட்டியை சுடவைக்கவும். புரோட்டா சுருக்கிய உருண்டைகளாக இருக்கிறதல்லவா அதை கைவிரல் கொண்டு சுருக்கம் கலையாது விரித்து விடவும். எண்ணெய் ஊற்றாமல் புரோட்டாவை தோசை சட்டியில் போட்டு (சிறு தீயில்) எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இவ்வாறு வாட்டிய புரோட்டாக்களை 2 தினம் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாது. பிரிட்ஜில் செய்து வைத்துக் காற்றுப் புகாத பாலிதீன் பைகளில் வைத்துக் கொண்டு தேவையான சமயம் பயன்படுத்தலாம்.

இந்த வறண்ட புரோட்டாக்களை பூரிமாதிரி, குழிந்த வாணலியில் நிறைய எண்ணெய் விட்டு சுட்டால் பொறுபொறுவென்று இருக்கும். இம்மாதிரி இருமுறை புரோட்டாவை முதலில் வெறும் தோசைச் சட்டியிலும், மற்றொரு முறை எண்ணெயிலும் பொரிப்பதால் புரோட்டாவின் உள்பக்கமும் வெந்து சுவையானதாக இருக்கும்.