பேபி கார்ன் மசாலா செய்வது எப்படி?

பேபி கார்ன் மசாலா அருமையான தொட்டுகறி ஆகும். இதனை சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

இனி எளிய முறையில் பேபி கார்ன் மசாலா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 3 எண்ணம் (நடுத்தர அளவு)

தக்காளி – 3 எண்ணிம் (நடுத்தர அளவு)

மல்லிப்பொடி – 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலாப் பொடி – 1½ டேபிள் ஸ்பூன்

மஞ்சள் – ¼ டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

நல்ல எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

முந்திரிப் பருப்பு – 6 எண்ணம்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நெய் – 1½ டேபிள் ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்

பட்டை – சுண்டு விரல் அளவு

ஏலக்காய் – 2 எண்ணம்

கிராம்பு – 2 எண்ணம்

நட்சத்திரப்பூ – 1 எண்ணம்

கல்பாசி – சிறிதளவு

பேபி கார்ன் மசாலா செய்முறை

பேபி கார்னை செவ்வகமாக வெட்டிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சுத்தம் செய்து சதுரங்களாக வெட்டவும்.

இஞ்சி, வெள்ளை பூண்டினை விழுதாக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை சுத்தமாக்கி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

 

 

நறுக்கிய வெங்காயம், தக்காளி கலவை

 

வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து நறுக்கிய பேபி கார்னை இரண்டு நிமிடங்கள் வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

பேபி கார்னை வதக்கும்போது
பேபி கார்னை வதக்கும்போது

 

வதங்கிய பேபி கார்ன்
வதங்கிய பேபி கார்ன்

 

பின்னர் அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லஎண்ணெய் ஊற்றி சதுரங்களாக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயத்தைச் சேர்த்து வதக்கும் போது
வெங்காயத்தைச் சேர்த்து வதக்கும் போது

 

கால் பாகம் வெந்ததும் இஞ்சி, வெள்ளை பூண்டு விழுது, முந்திரிப்பருப்பு சேர்த்து வதக்கவும்.

 

இஞ்சி, வெள்ளை பூண்டு விழுது, முந்திரிப்பருப்பு சேர்த்து வதக்கும் போது
இஞ்சி, வெள்ளை பூண்டு விழுது, முந்திரிப்பருப்பு சேர்த்து வதக்கும் போது

 

வெங்காயம் பாதி வதங்கியதும் அதனுடன் தக்காளியைச் சேர்த்து சுருள வதக்கவும்.

 

தக்காளியைச் சேர்த்ததும்
தக்காளியைச் சேர்த்ததும்

 

வெங்காயம் தக்காளிக் கலவையை தனியே எடுத்து ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் 1½ ஸ்பூன் நெய் சேர்த்து உருகியதும் பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, நட்சத்திரப்பூ, கல்பாசி சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

அதனுடன் அரைத்த விழுதினைச் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் மல்லிப்பொடி, கரம் மசாலாப் பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

 

கலவை கொதிக்கும் போது
கலவை கொதிக்கும் போது

 

கலவை கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து அதனுடன் வதக்கிய பேபி கார்ன் சேர்த்து கிளறி விடவும்.

 

பேபி கார்னைச் சேர்த்ததும்
பேபி கார்னைச் சேர்த்ததும்

 

ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.

கலவையில் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

 

கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்
கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

 

சுவையான பேபி கார்ன் மசாலா தயார்.

 

சுவையான பேபி கார்ன் மசாலா
சுவையான பேபி கார்ன் மசாலா

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப்பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றிற்குப் பதிலாக மசாலா பொடி சேர்த்து மசாலா தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.