பேரண்டத்தின் சிறுதுளி ‍- கவிதை

ஒரு நாள்

மரங்கள் பழங்களாக

விதைகளைத் தந்துவிட்டுத்

தூர நின்று பார்த்தன

மனிதர்கள் சேவகம் செய்கிறார்களாயென்று

யோசித்தன அவையெல்லாம்

நமக்காகக் கடவுள்

இவர்களைப் படைத்தாரென்று

அத்தனை விதைகளும் தின்னப்படாமல்

துப்பப் பட்டன

சில அல்ல பல

முளைத்து மீண்டும் பழங்களாக

விதைகளைத் தந்துவிட்டுத்

தூர நின்று பார்த்தன

மனிதர்கள் சேவகம் செய்கிறார்களாயென்று

இன்னொரு நாள்

நாய்கள் கூடிய கூட்டமொன்றில்

மனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

நமக்கு உணவளிக்கவே

இவர்கள் உழைக்கிறார்கள்

நாம் இருக்கவே

தாம் கட்டிய வீட்டையும்

தந்து விட்டுச் செல்கிறார்கள்

இவைகளும் யோசித்தன

நமக்காகக் கடவுள்

இவர்களைப் படைத்தாரென்று

இப்படியாய்

இப்படியாய்

நீண்டது உலகியல்

பேரண்டத்தின் சிறுதுளி

மரத்திற்கும் நாய்க்கும்

சேவகம் செய்பவன்

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

2 Replies to “பேரண்டத்தின் சிறுதுளி ‍- கவிதை”

  1. சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் இது ரொம்ப அபூர்வமான ஒன்றாக இருக்கிறது குறிப்பாக சந்திரசேகர் ஐயாவின் எழுத்து வெளியில் எங்களுக்கு தொடக்கூடிய தூரத்தில் அதே சமயம் தொட முடியாத தரத்தில் அமைந்த கவிதை மாற்று சிந்தனையில் மைல்கல்
    மனிதனின் தலையில் போட்ட பெரிய செங்கல்
    எப்போதும் நமக்காக எல்லாம் படைக்கப்பட்டது என்ற மமதையில் திரிந்த மனிதர் தலையில் ஓங்கி ஒரு குத்து விட்டிருக்கிறார் சந்திரன் ஐயா

    உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்றெல்லாம் பாடித் திரியும் மனிதர்களே நீங்களும் வேறு யாருக்காகவோ எதற்காகவோ அது அஃறிணையாக கூட இருக்கலாம் மரமோ செடியோ கொடியோ அவர்களுக்காக அவைகளுக்காக பிறந்து வாழ்கிறீர்கள் என்பதை அறிவு பூர்வமாகவும்ம் அறிவியல் பூர்வமாகவும்ம் இந்த கவிதை தெளிவுபடுத்துகிறது

    இந்த கவிதையை வைத்து யாரேனும் மாணவர்கள் பெரிய ஆராய்ச்சி கட்டுரைகளை கட்டாயம் எழுதலாம் நிறைய சாரா ம்சம் இதில் கொட்டி கிடக்கிறது

    ஆங்கிலத்தில் எம்பத்தி empathy
    எந்த ஒரு வார்த்தை இருக்கிறது எப்போதும் இதை மனிதன் உணர்வதே இல்லை இதற்கானபொருள் விளக்கம் தேடுவதுமில்லை

    எம்பத்தி என்றால் எதிர்ப்பக்கம் நின்று யோசிப்பது எதிர்பக்கம் என்றால் நமக்கு நாமே அல்ல, நான் அற்ற நாமற்ற ஒரு வேறுபட்ட இடத்தில் நின்று இந்த கவிதை empathy க் கான
    நீண்ட விளக்கத்தை தருகிறது

    இது சந்திரன் அய்யாவின் மாஸ்டர் பீஸ் நீண்ட நாளுக்கு பேசக்கூடிய நிலைக்கக்கூடிய கவிதை வாழ்த்துக்கள்
    எங்களைப் போன்றோர் எளிதில் உள்வாங்கிக் கொண்ட ஒரு கவிதையைப் படைத்தமைக்கு நன்றி இனிக்கும் இனிதாகட்டும்…

  2. சிறுவிதை, பேரண்டமாக மாறும் மாயத்தை கவிதையால் தான் நிகழ்த்த முடியும். பாரதி சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.