மனமே – கவிதை

மனம் என்பது மனிதன் ஆகலாம்
மனிதன் என்பவன் மனம் ஆகலாம்

நீ கூட்டம் கூட்டமாக எங்கே ஊர்ந்து
கொண்டு போகிறாய் மனமே?

நீ கணித்த இலக்கு அடுத்த நிமிடம்
நிரந்தரமற்றது என்று அறிவாயா மனமே?

நீ உன்னை அறியாமல் எத்தனை சக
மனதினைக் காயப்படுத்தினாய் மனமே?

நீ சக மனதை என்று மதிக்க
போகிறாய் மனமே?

நீ உன் வயிற்றுக்கு உணவளித்தது போக,
உன் உள்ளத்திற்கு என்று உணவளித்தாய் மனமே?

நீ காதல் என்னும் திருவிழாவுக்கு என்று
சென்று திரும்பினாய் மனமே?

நீ அந்த திருவிழாவில் தொலைந்து
உன்னை நீயே கண்டு கொண்டாயா மனமே?

ஆண் மனமே ஆண் மனமே நீ எப்போது
பெண் மனதைப் போற்றப் போகிறாய்

பெண் மனம் உனக்கும் இவ்வுலகில் உள்ள
அனைத்து மனதிற்கும் ஆற்றிய தொண்டை
என்று பாராட்டப் போகிறாய்?

ஆண் மனமே உன் திமிரை
என்று அடக்கப் போகிறாய்?

பெண் மனம் மீது நீ கொண்ட
வன்மத்தையும் வெறியையும் எப்போது
அடக்க போகிறாய்?

ஆண் மனமே ஆண் மனமே நீ பெண்
மனதின் ஆழத்தை புரிந்து
கொண்டதின் அளவு மிக குறைவு!!!

பெண் மனமே பெண் மனமே
ஆண் மனம் உனக்காக ஆற்றிய
தியாகத்தை நீ என்று உணர போகிறாய்?

தன் சுகத்தை தொலைத்து எங்கோ
உழைத்துக் கொட்டும் ஆண் மனதின்
பேரன்பை என்று உணர போகிறாய்?

நெரிசலிலே சிக்கி திணறும் உன்
வாழ்வை என்று இலக்கியம் எனும்
பேரன்பு கொண்ட பேரமைதிக்கு
ஆற்றப் போகிறாய் மனமே?

மனமே மனமே நீ மனிதத்துடன்
உரையாடிய பொழுது எவ்வளவு?

மனமே நீ போன இடத்திலே நின்று
வந்த வழியை மறவாதே!

மனமே நீ மனிதனுடன் கதை!
மனிதனே நீ மனதுடன் உறவு கொள்!

க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.