மிருக மனிதர்கள்

மனித இனம் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற முடியுமா?என ஆராய்ச்சி செய்து வரும் வேளையில், காடுகளில் வாழும் மிருக மனிதர்கள் பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.

ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் ‘கலஹரி’ (Kalahari) என்ற அடர்ந்த புதர்கள் மண்டிக் கிடக்கும் காடுகளில் மிருக மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் நமீபியா காடுகளிலும், அமேசான் காடுகளிலும், தென்ஆப்பிரிக்கா மற்றும் பெரு நாட்டுக் காடுகளிலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்ந்துவருகின்றனர்.

விமானம் மூலமும் நவீன கேமரா மூலமும் இவர்களின் இருப்பைக் கண்டுபிடித்துள்ளனர். காடுகளை மக்கள் அழிக்கும் போது, இவர்கள் அடர்ந்த காடுகளின் உட்பகுதிக்குச் சென்று விடுகின்றனர். காடுகளுக்குள்ளே அலைந்து திரிந்து, வேட்டையாடி வாழ்கிறார்கள்.

இவர்கள் ‘சான்’ (San) என்று அழைக்கப்படுகிறார்கள். ஆடைகள் எதுவுமே இன்றி வேட்டையாடியும், இலை, தழை, கிழங்க்குகளை உண்டும், மரங்களில் துயின்றும் வாழும் இவர்கள் தான் நம் மூதாதையர்கள். எனவே இவர்களை ‘மரபியலின்படி ஆதாம்கள்’ (Genetic Adams) என்றுகூறுகின்றனர். இவர்கள் கனிபாலஸ் (Cannibals) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மிருக மனிதர்கள் தங்களிடையே இருக்கக்கூடிய சக மனிதர்களைக் கூட அடித்துச் சாப்பிடக் கூடியவர்கள். இவர்களைப் பற்றி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, தொலைக்காட்சியில் மிருக மனிதர்களைக் காணுங்கள்.