முறுகல் தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி : 300 கிராம்
பச்சரிசி : 75 கிராம்
உளுந்தம்பருப்பு : 75 கிராம்

 

செய்முறை

தோசைக்கு இட்லி மாவைப்போல் அல்லாமல் அரிசி மாவு மிகவும் நைஸாக அரைத்தால் மொறுமொறுப்பாக நன்றாக இருக்கும். சுவையான முறுகல் தோசை வரும்.

தனிப்பச்சரிசியிலும், உளுந்த மாவு மட்டும் கலந்து தோசை மாவு தயார் செய்யலாம். அரிசியுடன் 1 தேக்கரண்டி வெந்தயம் நனைய வைத்து ஆட்டினால் தோசை ஒட்டாமல் வரும்.