ரயில் பற்றிய ரகசியங்கள் 2 – ரயில் ஓட்டுநர்

கடந்த வாரம் ரயில் பற்றிய குறியீடுகள் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ரயில் எப்படி இயக்கப்படுகிறது என்று பார்ப்போம்.

ரயில் ஓட்டுநரை “Loco Pilot” (LP) என்றும் அவருக்கு உதவி செய்பவரை “Assistant Loco Pilot” (ALP) என்றும் கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் ஒவ்வொரு நாளும் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்.

ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.

இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா? அப்படி தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது?

தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது; ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது; யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும்.

VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.

அப்படி அவர்கள் அதை அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு பிறகு விளக்கு எரியும். அதையும் அவர்கள் உதாசீனப்படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கு எரியும், அதையும் உதாசீனப்படுத்தினால், Automatic breaking system மூலம் வண்டி தானாகவே நின்று விடும்.

ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தை கூட்டுவது, குறைப்பது, ஹாரன் அடிப்பது போன்ற வேலைகளில் இருந்தால், அந்த பொத்தானை அமுக்க வேண்டியது இல்லை.

இந்த காலத்தில் தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, முன்நாளில் எல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.

இன்று வரையில் ரயில்வே ஓட்டுனர்களுக்குத் தனியாக கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் அடக்கி வைக்கத்தான் வேண்டும்.

அதுவும் அடுத்த ஸ்டேசனில்கூட ஒரு நிமிடம்தான் வண்டி நிற்கும். சிக்னல் விழுந்த உடன் வண்டியை எடுக்கணும்.

110 kmph குறையாமல் வண்டி ஓட்டணும். பஞ்சுவாலிட்டி இருக்கு. இதிலே இன்ஜின் பிரச்சினை, தண்டவாளத்தில் ஏதேனும் பிரச்சினை, சிக்னல், மனிதர்கள் தற்கொலை மற்றும் விலங்குகள் குறுக்கே வருதல் என அனைத்தையும் கண் விழித்து பார்த்து ஓட்டவேண்டும்.

கேட் ஹாரன் அடிக்கவேண்டும். 60 செகண்டுக்கு ஒரு முறை VCD பிரஸ் பண்ணனும்; 25 kwh கரண்டின் கீழ் வேலை; இன்ஜீன் சூடு.

ராத்திரியில் வண்டியின் வேகத்தை பொருத்து கத்தி போல குத்தும் குளிர். கூடுதல் வேகத்தில் செல்லக் கூடாது. சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டும். சிவப்பு சிக்னலை தாண்டினால் வேலை போய்விடும் என பல அழுத்தங்கள் இருக்கு.

டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதி கொடுக்கணும். இதேதான் பகல் நேரங்களிலும்.

இப்படி பலவிதமான சிக்கல்களுக்கு இடையில்தான் ரயில் ஓட்டுநர்கள் நம்மை பாதுகப்பாக பயணிக்க வைக்கிறார்கள்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.