வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?

வாழைத்தண்டு சூப் மிகவும் ஆரோக்கியமான, ருசியான சூப் ஆகும். வாழைத்தண்டினை சுத்தம் செய்வதற்கு யோசிப்பவர்கள் கூட இதனை எளிதாக செய்யலாம்.

கடைகளில் வாழைத்தண்டு வாங்கும் போது புதிதாக இருப்பதைப் பார்த்து வாங்கவும். வெளியே இருக்கும் கையால் எளிதாக பிரிக்கக் கூடிய தோல்களை பிரித்துவிட்டு உள்ளே இருக்கும் தண்டினை மட்டும் பயன்படுத்தவும்.

 

உபயோகப்படுத்தப்படும் தண்டு
உபயோகப்படுத்தப்படும் தண்டு

 

பொதுவாக வாழைத்தண்டினை வாங்கி ஓரிரு நாட்களில் பயன்படுத்தி விட வேண்டும். எல்லா நேரங்களிலும் இது குடிப்பதற்கு ஏற்றது.

இனி சுவையான வாழைத்தண்டு சூப் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

வாழைத்தண்டு – 200 கிராம்

பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10 எண்ணம்

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

வெள்ளைப் பூண்டு – 3 இதழகள் (பெரியது)

இஞ்சி – கட்டை விரல் அளவு

மிளகு – 1 ஸ்பூன்

கொத்த மல்லி – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

மிளகு பொடி – தேவையான அளவு

செய்முறை

வாழைத்தண்டினை வட்ட வட்டமாக 1/2 இன்ஞ் கனத்தில் வெட்டவும்.

வாழைத்தண்டினை வெட்டும் போது வரும் நாரினை, ஆட்காட்டி விரலில் சுற்றி வெளியே இழுக்க வந்து விடும்.

வாழைத்தண்டினை வட்டமாக வெட்டியதும் தண்ணீரில் போடவும். இல்லையெனில் வாழைத்தண்டு கறுத்து விடும்.

 

வட்டமாக வெட்டிய வாழைத்தண்டு
வட்டமாக வெட்டிய வாழைத்தண்டு

 

வட்டமாக வெட்டிய வாழைத்தண்டினை சிறுசிறு சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

 

சதுரங்களாக்கிய வாழைத்தண்டினை குக்கரில் சேர்த்ததும்
சதுரங்களாக்கிய வாழைத்தண்டு

 

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டவும்.

இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்டவும்.

பாசிப் பருப்பினை அலசி வைக்கவும்.

மிளகினை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

குக்கரில் நறுக்கிய வாழைத்துண்டினை சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, சீரகம், பொடித்த மிளகு, இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து குக்கரினை மூடி அடுப்பில் வைக்கவும்.

 

வாழைத்தண்டுடன் பாசிப்பருப்பு, சீரகம், மிளகுப்பொடி, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்ததும்
வாழைத்தண்டுடன் பாசிப்பருப்பு, சீரகம், மிளகுப்பொடி, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்ததும்

 

தண்ணீர் சேர்த்ததும்
தண்ணீர் சேர்த்ததும்

 

ஒரு விசில் வந்ததும், சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைத்து, அடுப்பினை அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.

 

குக்கரைத் திறந்ததும்
குக்கரைத் திறந்ததும்

 

வடித்து எடுக்கப்பட்ட வாழைத்தண்டு தண்ணீர்
வடித்து எடுக்கப்பட்ட வாழைத்தண்டு தண்ணீர்

 

வடிக்கட்டிய வாழைத்தண்டு கலவையில் மூன்று குழிக்கரண்டி அளவு எடுத்து தனியே வைக்கவும்.

 

தனியே எடுத்து வைக்கப்பட்ட வாழைத்தண்டு கலவை
தனியே எடுத்து வைக்கப்பட்ட வாழைத்தண்டு கலவை

 

மீதமுள்ள வாழைத்தண்டு கலவையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

 

மிக்சியில் சேர்த்ததும்
மிக்சியில் சேர்த்ததும்

 

அரைத்ததும்
அரைத்ததும்

 

அரைத்த கலவை மற்றும் அவித்த முழு வாழைத்தண்டு ஆகியவற்றை, ஏற்கனவே வடித்து வைத்துள்ள வாழைத்தண்டு தண்ணீரில் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு, கலவையை வடித்துக் கொள்ளவும்.

 

கொதிக்கும் போது
கொதிக்கும் போது

 

தேவைப்படும் சமயத்தில் கலவையை லேசாக சூடேற்றி, கிண்ணத்தில் ஊற்றி, தேவையான அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் மிளகுத் தூள் சேர்த்து பரிமாறவும்.

 

கிண்ணத்தில் ஊற்றியதும்
கிண்ணத்தில் ஊற்றியதும்

 

மல்லி இலை, மிளகுப்பொடி சேர்த்ததும்
மல்லி இலை, மிளகுப்பொடி சேர்த்ததும்

 

சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.

 

சுவையான வாழைத்தண்டு சூப்
சுவையான வாழைத்தண்டு சூப்

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சோள மாவினைச் சேர்த்தும் சூப் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.