விடுகதைகள் – விடைகள் – பகுதி 1

1. முப்பத்திரெண்டு சிப்பாய்; நடுவே மகராசா. அவர்கள் யார்?

பற்கள், நாக்கு

 

2. கை பட்டதும் சிணுங்குவான்; கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்?

அழைப்பு மணி (காலிங்பெல்)

 

3. காதைத் திருகினால் கதை சொல்லுவான். அவன் யார்?

வானொலி

 

4. அனலில் பிறந்தவன்; ஆகாயத்தில் பறக்கிறான். அவன் யார்?

புகை

 

5. நனைந்தாலும் நடுங்க மாட்டான். அவன் யார்?

குடை

 

6. பறிக்கப் பறிக்கப் பெரிதாகிறது. அது என்ன?

பள்ளம்

 

7. நோயுமில்லை; நொடியுமில்லை; நாளலெல்லாம் மெலிகிறார். அவர் யார்?

காலண்டர்

 

8. வானுக்கும் பூமிக்கும் ஒரே கம்பி; வளம் கொழிக்க வைக்கும் கம்பி. அது என்ன?

மழை

 

9. இருட்டில் கண்சிமிட்டும்; நட்சத்திரம் அல்ல. அது என்ன?

மின்மினிப்பூச்சி

 

10. வண்ண வண்ண பூ; ஓடி ஒளியும் பூ; தலையில் சூடா பூ. அது என்ன பூ?

வண்ணத்துப்பூச்சி

 

11. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான். அவன் யார்?

பந்து

 

12. கொடுக்க முடியும்; எடுக்க முடியாது. அது என்ன?

கல்வி

 

13. அள்ளக் குறையாது; குடிக்க உதவாது. அது என்ன?

கடல் நீர்

 

14. ஒற்றைக் கால் சுப்பனுக்கு தலைக்கன‌ம் அதிகம். அவன் யார்?

பம்பரம்

 

15. பூமியிலே வளராத மரம்; கிளை உண்டு; இலை இல்லை. அது என்ன?

மான் கொம்பு

 

16. கரையிலே போகிற கண்கவர் பாப்பாவுக்கு, முதுகுகிலே மூன்று சுழி. அது என்ன?

அணில்

 

17. கூடவே வருவான்; ஆனால் பேச மாட்டான். அவன் யார்?

நிழல்

 

18. உயர மரத்திலே, உச்சாணிக்கிளையிலே, தொட்டில் கட்டி ஆடுது. அது என்ன?

தூக்கணாங்குருவி

 

19. உணவை எடுப்பான்; ஆனால் உண்ண மாட்டான். அவன் யார்?

அகப்பை

 

20. ஒரு சாண் குள்ளனுக்கு குடுமி மட்டும் அரைசாண். அவன் யார்?

தேங்காய்

 

21. தாழ்ப்பாள் இல்லாத கதவு; தானாக மூடித்திறக்கும் கதவு. அது என்ன?

இமை

 

22. ஆற்றில் அலையுது தம்பி; அழுக்கெல்லாம் விழுங்குவது தம்பி. அது என்ன?

மீன்

 

23. அவனிடம் ஆயிரம் முடிச்சுகளும் உண்டு; ஆயிரம் ஓட்டைகளும் உண்டு. அவன் யார்?

கயிற்றுக் கட்டில்

 

24. ஓயாது இரையும்; எந்திரமல்ல. உருண்டோடி வரும்; பந்துமல்ல. அது என்ன?

கடல் அலை

 

25. ஓங்கி வளர்ந்தவன்; தாகம் தீர்ப்பதில் கெட்டிக்காரன். அவன் யார்?

தென்னை மரம்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.