வெள்ளை குருமா செய்வது எப்படி?

வெள்ளை குருமா என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை இட்லி, சப்பாத்தி, பரோட்டா, பூரி, தோசை, இடியாப்பம் என எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

சுவையாக, எளிமையான முறையில் வெள்ளைக் குருமா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கை பீன்ஸ் – 50 கிராம்

பச்சை பட்டாணி – 50 கிராம்

உருளைக் கிழங்கு – 100 கிராம்

கேரட் – 50 கிராம்

உப்பு – தேவையான அளவு

மசால் தயாரிக்க

 

மசால் தயாரிக்க தேவையானவை
மசால் தயாரிக்க தேவையானவை

 

தேங்காய் – 1/4 மூடி (மீடியம் சைஸ்)

பொரிகடலை – 1/2 டேபிள் ஸ்பூன்

பெருஞ்சீரகம் (சோம்பு) – 1/2 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு – 4 எண்ணம் (முழுமையானது)

பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)

தாளிக்க

 

தாளிக்க‌ தேவையானவை
தாளிக்க‌ தேவையானவை

 

நல்ல எண்ணெய் – 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கீற்று

ஏலக்காய் – 2 எண்ணம்

பட்டை – பாதி சுண்டுவிரல் அளவு

கிராம்பு – 2 எண்ணம்

செய்முறை

முதலில் முருங்கை பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றை கழுவி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

 

துண்டுகளாக்கப்பட்ட காய்கறிகள்
துண்டுகளாக்கப்பட்ட காய்கறிகள்

 

குக்கரில் நறுக்கிய முருங்கை பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றுடன் பச்சை பட்டாணியை கழுவிச் சேர்க்கவும்.

 

காய்கறிகளை குக்கரில் சேர்த்ததும்
காய்கறிகளை குக்கரில் சேர்த்ததும்

 

காய்கறிகள் மூழ்கும் அளவுக்கு அளவாக தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்க்கவும்.

குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி விடவும்.

மிக்ஸியில் தேங்காய், முந்திரி பருப்பு, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், பொரிகடலை மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

 

அரைத்த விழுது
அரைத்த விழுது

 

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, அலசிய கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் அதனுடன் வேக வைத்த காய்கறிகளை தண்ணீருடன் சேர்த்து, அதில் அரைத்த விழுதினைச் சேர்த்து ஒருசேரக் கலக்கவும்.

 

அரைத்த விழுதினைச் சேர்த்ததும்
அரைத்த விழுதினைச் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.

குருமா நுரை கூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

 

கொதிக்கும் போது
கொதிக்கும் போது

 

சுவையான வெள்ளை குருமா தயார்.

 

சுவையான வெள்ளை குருமா
சுவையான வெள்ளை குருமா

 

இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

குறிப்பு

விருப்பமுள்ளர்கள் கசகசாவை சிறிதளவு சேர்த்து மசால் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.