தென்னிந்திய திரைப்படங்களும் தேசிய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் போட்டி போடக்கூடியவைதான் என நிருபித்த திரு இராஜமௌலி மற்றும் குழுவினருக்கு இனிது தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியத் திரையுலகில் முதன் முறையாக 1,000 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பாகுபலி திரைப்படம் சார்ந்த அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்!
இந்திய மொழிகளில் பல மொழிகளிலும் சினிமா எடுக்கப்பட்டாலும் இந்திக்கு அடுத்தபடியாக இருப்பவை தமிழ் மற்றும் தெலுங்கு மட்டும்தான்.
இந்தியாவின் பன்முகத் தன்மையைக் கலைத்துறையில் காப்பாற்றி வருவதில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறைக்கு பங்கு அதிகம். கூடவே கன்னடம் மற்றும் மலையாளம் இரண்டும் துணை நிற்கின்றன.
தனது பெரிய சந்தையின் காரணமாக இந்திய சினிமா என்றாலே அது இந்தி சினிமாதான் என்றொரு பிம்பம் உருவாகாமல் தடுக்க இது போன்ற வெற்றி நிச்சயம் கைகொடுக்கும்.
தென்னிந்திய சினிமா எப்படி தைரியமாக முன்செல்ல வேண்டும் என்பதை பாகுபலி உணர்த்தியிருக்கின்றது.
தரமான படத்தைத் தெளிவாகத் திட்டமிட்டு எடுத்து சிறப்பாக அதை சந்தைப்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பாகுபலி ஒரு உதாரணம்.
தென்னிந்திய சினிமா இன்னும் நிறைய பாகுபலிகளை உருவாக்கட்டும்!
– வ.முனீஸ்வரன்