நடை பயிற்சி என்பது இன்றைய சூழ்நிலையில் மனத்திற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கக்கூடியதாகவும், அவசியமானதாகவும் உள்ளது.
நடைபயிற்சி மேற்கொள்வதால் எண்ணில்லாத பயன்கள் ஏற்படுகின்றன.
ஒருநாளைக்கு 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் பயன்களுள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
இதய நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
இரத்த ஓட்டத்தின் அளவினை சீராக்குகிறது.
இரத்த அழுத்தத்தின் அளவினை மேம்படுத்துகிறது.
உடலின் நோய் எதிர்ப்பாற்றலின் அளவினை அதிகரிக்கிறது.
எலும்புகள் மற்றும் தசைகளை வலுபடுத்த உதவுகிறது.
நுரையீரல் நன்கு செயல்பட உதவுகிறது.
உடல் அதிகளவு விட்டமின் டி தயாரிக்க உதவுகிறது.
உடல் எடையினை பராமரிக்க உதவுகிறது.
ஒபிசிடி என்னும் உடல்பருமனை தடுக்க உதவுகிறது.
உடல் ஆற்றலின் அளவினை அதிகரிக்க உதவுகிறது.
உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது.
நீரழிவு நோய் வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது.
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது.
மனப் பதட்டத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன உற்சாகத்தின் அளவினை அதிகரிக்க உதவுகிறது.
ஆழ்ந்த உறக்கம் ஏற்பட உதவுகிறது.
வாழ்க்கை முறையை மேம்படுத்துகிறது.
சுய பாதுகாப்பினை வளர்த்து கொள்வதற்கு உதவுகிறது.
படைப்பாற்றல் திறமையை உண்டாக்குகிறது.
நாமும் நடப்போம்; நலம் பெறுவோம்.
மறுமொழி இடவும்