நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25

நிலத்தடி நீர்

‘மக்கும் குப்பைகளை, வீட்டுத் தோட்ட மண்ணில் புதைத்து வைத்தால், மண் வளம் கூடுமே. அந்த செழிப்பான மண்ணை பயன்படுத்த, செடிகள் நன்றாக வளருமே’ என்ற எண்ணம் வெகுநாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

இன்று இந்த வேலையை செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்திற்குச் சென்றேன். மண்வெட்டியை பயன்படுத்தி ஒரு சிறிய பள்ளத்தை உண்டாக்கினேன்.

இன்னும் ஆழத்தை அதிகப்படுத்தலாம் என்று தோன்றியது. அதன்படி, பள்ளத்தின் ஆழத்தை மேலும் அதிமாக்கினேன்.

Continue reading “நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25”

இடதுகை பழக்கம் உடையவர்கள் ‍‍- ஓர் பார்வை

நம்மிடையே பெரும்பாலோர் வலக்கைப் பழக்கம் உடையவர்களாகவும், சிலர் இடதுகைப் பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறோம். இன்னும் சிலர் இரு கைகளையும் சுலபமாகப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள் (Ambidextrous).

உலகப்புகழ் பெற்ற லியானார்-டோ-டாவின்ஸி, மைக்கேல்லேஞ்ஜலோ, பிதோவென், விக்டோரியா இளவரசி போன்றோர் இடக்கைப் பழக்கம் உடையவர்களாக இருந்தும், கொஞ்ச காலம் முன்பு வரை இடக்கைப் பழக்கம் என்பது மக்களிடையே ஓர் குறையாகவே கருதப்பட்டு வந்தது.

Continue reading “இடதுகை பழக்கம் உடையவர்கள் ‍‍- ஓர் பார்வை”

நீர்க்கடிகாரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் ‍- 24

நீர்க்கடிகாரம்

மேசையில் சில காகித லோட்டாக்கள், அளவுகோல், அழியாத‌ மை உடைய‌ எழுதுகோல் மற்றும் ஒரு கிண்ணத்தில் நீர் முதலியனவற்றை கொண்டு வந்து வைத்தேன்.

(லோட்டா என்றால் குவளை அல்லது டம்ளர் என்று அர்த்தம்.)

ஒரு காகித லோட்டாவை எடுத்து அதில் அளவீடுகளை வரையத் துவங்கினேன்.

யாரோ என்னை அழைப்பது போன்று தோன்றியது; கவனம் சிதறியது; சுற்றும் முற்றும் பார்த்தேன்.

“எங்க சார் பாக்குறீங்க? நான் தான் நீர் பேசுறேன். தெரியலையா?” என்று உரக்க பேசியது நீர்.

அப்பொழுது தான் உணர்ந்தேன்.

Continue reading “நீர்க்கடிகாரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் ‍- 24”

கன நீர்- நீருடன் ஓர் உரையாடல் 23

கன நீர்

எனது அறையில் இருந்த புத்தக அலமாரிகளை சீர்படுத்திக் கொண்டிருந்தேன். அலமாரியின் மேல் அடுக்கில் இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை கீழே இறக்கிவைத்தேன்.

பெட்டிகளின் மீது தூசியும் ஒட்டடையும் பயங்கரமாக இருந்தன. அவற்றை எல்லாம் சுத்தமாக துடைத்து தூய்மையாக்கினேன். பின்னர் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, அதில் இருந்தவற்றை வெளியே எடுத்து வைத்தேன்.

பெரும்பாலும் அவை பழைய நோட்டு புத்தகங்களும், எழுதப்பட்ட தாள்களும் தான். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு கல்லூரி வகுப்புகள் நடந்தபொழுது, நான் எடுத்த பாடக் குறிப்புகளும் கட்டுகட்டாக இருந்தன.

Continue reading “கன நீர்- நீருடன் ஓர் உரையாடல் 23”

நீர் ஏற்றம் – நீருடன் ஓர் உரையாடல் – 22

நீர் ஏற்றம்

நண்பர் ஒருவர், நுண்புழை ஏற்றம் (capillary action) என்ற அறிவியல் தத்துவத்தை விளக்கும் ஒரு எளிய செய்முறை விளக்கத்தை நிகழ்த்தி, அதனை காணொளியாக எடுத்து அனுப்பும்படி கேட்டிருந்தார்.

அதற்காகத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு யோசனை கிடைத்தது. அதன்படி, ஒரு கண்ணாடி லோட்டாவில் பாதியளவு நீர் எடுத்துக் கொண்டேன். ஒரு மெல்லிழைக் காகித்தை (tissue paper) இரண்டாக செங்குத்தாக வெட்டினேன்.

ஒரு காகித துண்டினை எடுத்து, அதன் முனை மட்டும் கண்ணாடி லோட்டாவில் இருக்கும் நீரின் மேற்பரப்பை தொடும்படி பிடித்தேன். உடனே, நீர் அந்த மெல்லிழைக் காகித துண்டு வழியே மேலே ஏறியது.

Continue reading “நீர் ஏற்றம் – நீருடன் ஓர் உரையாடல் – 22”