சொர்க்க வனம் 10 ‍- நண்பர்களின் உரையாடல்

நண்பர்களின் உரையாடல்

அன்று மாலை ஆறு மணிக்கு…

வெளிச்சம் மங்கியிருந்தது. சொன்னபடியே, பூங்குருவி கூட்டத்தின் தலைவன் ரெட்விங், ஸ்வாலோ குருவிகள் தங்கியிருந்த மரத்தை வந்தடைந்தது. ரெட்விங்குடன் அதன் மூன்று நண்பர்களும் வந்திருந்தன.

அங்கு, வாக்டெய்ல் தனது புத்தகத்தில் பயண அனுபவங்களைப் பற்றி குறிப்பு எழுதிக் கொண்டிருந்தது. Continue reading “சொர்க்க வனம் 10 ‍- நண்பர்களின் உரையாடல்”

சொர்க்க வனம் 9 ‍- நண்பனை சந்தித்த இருன்டினிடே

நண்பனை சந்தித்த இருன்டினிடே

பகலில் ஓய்வு, இரவில் பயணம் என ஸ்வாலோ இன குருவிக்கூட்டம் மேலும் நான்கு நாட்கள், பயணத்தை தொடர்ந்தது.

அப்பொழுது, குடியிருப்புகள், கோபுரங்கள், வாகனங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள் என மனிதனின் பிரம்மாண்ட படைப்புகளை கண்டு அவை வியந்தபடியே பயணித்தன. Continue reading “சொர்க்க வனம் 9 ‍- நண்பனை சந்தித்த இருன்டினிடே”

சொர்க்க வனம் 8 – செயற்கை ஒளி விளைவு

செயற்கை ஒளி விளைவு

மேலும் இரண்டு நாட்கள் கடந்தன. வழக்கம் போல் அன்று இரவு ஏழு மணி அளவில் பயணத்தை தொடர்ந்தது குருவிக் கூட்டம்.

மெல்ல மெல்ல நில அமைப்பு மாறிக் கொண்டிருந்தது. குருவிகள் எல்லாம் ஆச்சரியத்துடன் அதனை பார்த்துக் கொண்டே பயணித்தன. Continue reading “சொர்க்க வனம் 8 – செயற்கை ஒளி விளைவு”

சொர்க்க வனம் 7 – ராபின் தந்த தகவல்

ராபின் தந்த தகவல்

அதிகாலையில் குருவிகள் எல்லாம் கண் விழித்தன. பற்பல செய்திகளைத் தங்களுக்குள்ளே அவை பரிமாறிக் கொண்டிருந்தன. அதனால் அப்பகுதியே கலகலப்பாக இருந்தது.

வாக்டெய்லும் மும்முரமாக தனது பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தது.

மெல்ல வானம் விடிந்தது. அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க மரத்திலிருந்து சில குருவிகள் புறப்பட்டுச் சென்றன. Continue reading “சொர்க்க வனம் 7 – ராபின் தந்த தகவல்”

நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்?

நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்?

என்னுடைய செல்ல நாய் வீட்டிற்கு வெளியே வந்த என் மகளை வேகமாகச் சென்று மூக்கால் உரசியது. உடனே என் மகள் “நாயோட மூக்கில இருந்த ஈரம் கைல ஒட்டிருச்சு” என்று அழுதாள். நானும் நாயின் மூக்கு ஈரமாக இருப்பதை அடிக்கடி கவனித்திருக்கிறேன்.

கால்நடை மருத்துவரிடம் நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்? என்ற கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் காரணங்கள் பல கூறினார். அதனையே உங்களுக்கு கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். Continue reading “நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்?”