கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

கொசு கடிக்காதேகொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா? என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் உள்ளது. அதற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ள, இரண்டு அறிவியல் அறிஞர்களின் உரையாடல் மூலம் நமக்குக் கிடைக்கின்றது.

 

“என்ன வேதிவாசன் சார், கொசு கடிக்குதா?”

(தனது வலது கையால் இடப்பக்க தோள்பட்டை பகுதியில் கடித்த கொசுவை அடித்த படியே)  “ஆமாங்க…. கணிதநேசன் சார்! கொசு நல்லா கடிக்குது!”

“கொசுவுக்கு எப்படி தான் தெரியிதோ? தெரியல! மனுச‌ங்கள தேடி கண்டுபிடிச்சு இப்படி கடிக்குதே!”

Continue reading “கொசு கடிப்பது ஏன்? அதைத் தடுக்க முடியுமா?”

வாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை

வாட்ஸ்ஆப் செய்த நன்மை

வாட்ஸ் ஆப் செய்த நன்மை என்ற இக்கதை, நவீன தொழில் நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால், அளவிட முடியாத நன்மைகளைப் பெறலாம் என்பதை உணர்த்துகின்றது.

அன்றைக்கு அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென கைபேசி அழைத்தது.

கைபேசியை எடுத்துப் பார்த்தால், தெரியாத எண் ஒளிர்ந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, கைபேசியை எடுத்தான் கதிர்.

Continue reading “வாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை”

கத்தரித் துண்டுகள் பழுப்பாக மாறுவது ஏன்?

கத்தரித் துண்டுகள் பழுப்பாக மாறுவது ஏன்

பள்ளி முடிந்தது. வழக்கம் போல் கணிதநேசனும் வேதிவாசனும், ஒன்றாக புறப்பட்டு, கணிதநேசனுடைய இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர்.

வாகன இருக்கையை கையால் இரண்டு தட்டுதட்டி, அதிலிருந்த தூசிகளை நீக்கியபின், வாகனத்தை இயக்குவதற்கு தயாரானார் கணிதநேசன்.

ஆசைமுகம் மறந்துப் போச்சே…. என்ற பாரதியார் பாடல் அழைப்போசை ஒலிக்கத் தொடங்கியது, வேதிவாசனின் கூர்திறன் பேசியிலிருந்து…. Continue reading “கத்தரித் துண்டுகள் பழுப்பாக மாறுவது ஏன்?”

மலர்களை கொல்லும் மலர் – அறிவியல் குறுங்கதை

மலர்களைக் கொல்லும் மலர்

மலர்களை கொல்லும் மலர் என்னும் இக்கதை பூக்களே பூக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன என்பதை விளக்குகிறது.

அது மதிய நேரம். எட்டாம் வகுப்பில் தாவர உலகம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் வேதிவாசன்.

வகுப்பு நேரம் முடிந்து உணவு இடைவேளை தொடங்கியதை பள்ளி மணியோசை மூலம் தெரிந்து கொண்டார். Continue reading “மலர்களை கொல்லும் மலர் – அறிவியல் குறுங்கதை”