இமயமலை அதிசயம்

Ganga

அமாவாசை, மாதப் பிறப்பு, ஏகாதசி, சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் ஆகிய புண்ணிய காலங்களில் கங்கையிலும், இமயமலை நதியிலும் பக்தியுடன் ஸ்நானம் செய்வது, அளவற்ற புண்ணிய பலனைத் தருவதுடன் பாவங்களையும் உடனுக்குடன் போக்கும்.

இதே போன்று இமயமலை உட்பகுதியில் உள்ள உஷ்ணநீர் குண்டங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மகா புண்ணிய நதிகளின் அவதார ஸ்தலமாகிய கங்கோத்ரி, யமுனோத்ரி, மானாஸர் (ஸ்ரீ வியாஸர் குகை அருகில்) மற்றும் நதிகள் சங்கமமாகும் பிரயாகைகள் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வதாலும், மிகக் கடுமையான தவத்தினால்கூட பெறமுடியாத புண்ணிய பலனைப் பெறலாம்.

 

பரம கருணை

sivan

முதல் மூன்று யுகங்களில் எளிதில் கிடைக்காத திருக்கயிலை தரிசனமும், மானஸ தீர்த்த ஸ்நானனும் கலியுகத்தில் மட்டும் எளிதில் கிடைக்கிறது. பகவான், கலியுகத்தில் தன்னை மிகவும் எளியவனாகவும், அடைவதற்குச் சுலபனாகவும் செய்து கொள்கிறான் பரம கருணை கொண்டு.

 

எரியும் விளக்கைத் தூண்டும் முறை

Kuthu_Vilakku

விளக்கு எரியத் தொடங்கியவுடன், அந்த தீபத்துக்குரிய தேவதை ஆவாஹனமாகி விடுவதால், எரியும் விளக்குத்திரியின் கசடை தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் தோஷங்கள் ஏற்படும்.

விளக்கு திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம். விளக்கின் ஒளி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே உத்தமமான முறை.

 

திருக்கயிலை யாத்திரை

திருக்கயிலை

திருக்கயிலை புனித யாத்திரையை மேற்கொள்வதற்கு உடல் ஆரோக்கியம், உள்ளத்தில் உறுதி, பணவசதி, பகவானிடம் பரிபூரணமான பக்தி ஆகிய நான்கும் மிக, மிக அவசியம்.

கடல்மட்டத்திலிருந்து, திருக்கயிலாயம் 6637 மீட்டர் உயரத்திலும், மானஸ சரோவரம் 4556 மீட்டர் உயரத்திலும் இருப்பதால், பிராண வாயு குறைவாக இருக்கும். அதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். உடல் திடம் மட்டும் போதாது. மனோதிடமும் அவசியம்.