கணபதி வழிபாடு

விநாயகர்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே.

– சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.123.5

 

சண்முக கவசம்

முருகன்

சண்முக கவசம் என்பது முருகப்பெருமான் மீது பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் பாடி அருளிய 30 பாடல்கள் ஆகும். இப்பாடல்களின் முதல் எழுத்துக்கள் தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் 12-னையும், மெய் எழுத்துக்கள் 18-னையும் கொண்டு தொடங்கப்பட்டிருப்பது சிறப்பாகும். Continue reading “சண்முக கவசம்”

ஓணம் பண்டிகை

ஓணம்

ஓணம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அத்தப்பூ கோலமும் ஓண விருந்தும் ஆகும். ஒவ்வொரு பண்டிகையின் பேரைச் சொன்னவுடன் அப்பண்டிகையின் சிறப்புத் தன்மை நம் நினைவிற்கு வரும். அவ்வாறே இப்பண்டிகையும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. Continue reading “ஓணம் பண்டிகை”