சிவ சின்னங்கள்

sivan

சிவ சின்னங்கள் ஐந்து. அவை

திருநீறு,

உருத்திராட்சம்,

வில்வம்,

ஸ்படிகலிங்கம்,

மற்றும் பஞ்சாட்சரம் ஆகிய ஐந்தும் ஆகும். Continue reading “சிவ சின்னங்கள்”

விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி (பிள்ளையாா் சதுர்த்தி) என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது.

அமாவாசை அல்லது பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் வருவது சதுர்த்தி ஆகும். அமாவாசை முடிந்து நான்காவது நாளில் வருவது ‘சுக்லபட்ச சதுர்த்தி’ அல்லது ‘வளர்பிறை சதுர்த்தி’ ஆகும்.

பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் வருவது ‘கிருஷ்ணபட்ச சதுர்த்தி’ அல்லது ‘தேய்பிறை சதுர்த்தி’ ஆகும். மாதந்தோறும் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்கின்றோம்.

Continue reading “விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டம்”

விநாயகர் வழிபாட்டுமுறை

விநாயகர் வழிபாட்டுமுறை

விநாயகர் வழிபாட்டுமுறை – விநாயகரை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் தனது நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும்.

பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும்.

தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளை சிதறச் செய்ய வேண்டுமென பணிவாக கேட்க வேண்டும்.

அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும். Continue reading “விநாயகர் வழிபாட்டுமுறை”

விநாயகர் சிறப்பு – திருஉருவ விளக்கம்

விநாயகர் சிறப்பு

விநாயகர் (பிள்ளையார்) மிகவும் எளிமையான கடவுள். குளந்தங்கரை, அரசமரத்தடி, தெருமுக்கு என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

மண், சாணம், மஞ்சள் ஆகிய எளிய பொருட்களிலும் விநாயகரை உருவாக்கி வழிபடலாம்.

எந்த ஒரு காரியமும் விநாயகரை வழிபட்டுத் தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் ‘முதற்கடவுள்’ ஆகிறார். Continue reading “விநாயகர் சிறப்பு – திருஉருவ விளக்கம்”