மனதுக்குள் மத்தாப்பு – ஹைக்கூ கவிதைகள்

தன்னுடனே இருந்தும்
தொட இயலவில்லை
காயம்

மகிழ்ச்சி வெள்ளம்
மறைந்து போனது
கலைந்த கனவு

Continue reading “மனதுக்குள் மத்தாப்பு – ஹைக்கூ கவிதைகள்”

அழகு நிலா – சிறுகதை

அழகு நிலா

மாட்டுத் தொழுத்தில் கட்டியிருந்த பசுமாடு நிமிடத்திற்கு ஒருமுறை அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தது. ஈன்று ஓரிரு மாதங்களே ஆகியிருந்தது.

கன்றுக் குட்டியை அதன் அருகிலேயே சற்றுத் தள்ளிக் கட்டியிருந்தார்கள். இருந்த இடத்திலிருந்து நகர முடியாமல் கன்றுக் குட்டியும் பசுவின் குரலுக்கு எதிர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

புழக்கடை பக்க கதவைத் திறந்து கொண்டு தொழுவத்திற்குள் வந்தார் பார்த்தசாரதி – மோகனின் தந்தை. அதிகாலை நேரம், பசுமாட்டின் அருகில் வந்தவர் அதைத்தட்டிக் கொடுத்து முதுகைத் தடவினார்.

Continue reading “அழகு நிலா – சிறுகதை”

அன்புத் தந்தைக்கு மகளின் வெள்ளை வரிகள்

அன்புத் தந்தைக்கு மகளின் வெள்ளை வரிகள்

உயிர் தந்த என் உயிரே
உறவென நினைத்தேன் உனையே
என் காப்பியத்தின் கலைமகனே
என் காலத்தின் மூலவனே

உனக்காய் ஒரு கவியை
உரித்தாக்க நான் எண்ணி
உயிர் என்னும் உதிர மையால்
எழுதும் வெள்ளை வரிகள் இவை

Continue reading “அன்புத் தந்தைக்கு மகளின் வெள்ளை வரிகள்”

தடுப்பூசிகளின் துணைகொண்டு

தடுப்பூசிகளின் துணைகொண்டு

துணிவுடன் கொரோனாவை எதிர்கொள்வோம்!

அனுதினமும் அதிகரிக்கும்

அகால மரணங்களுக்கு முடிவில்லை!

ஆர்ப்பரித்தாடும் கொரோனாவின்

அதிபயங்கர இரண்டாம் அலை!

Continue reading “தடுப்பூசிகளின் துணைகொண்டு”