காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி

காதல் பிரிவு

அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

Continue reading “காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி”

ஏளனம் – கதை – எம்.மனோஜ் குமார்

ஸ்விக்கி செயலியில், ராகவ் ஆர்டர் செய்து தனக்கு தேவையான உணவு பொருட்கள் வாங்கினான்.

ஒருமணி நேரம் கழித்து, ராகவின் வசிப்பிடமான வடபழனிக்கு டெலிவரி ஊழியர் கார்த்திக் வந்தான்.

Continue reading “ஏளனம் – கதை – எம்.மனோஜ் குமார்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 4 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

தாய் எழுப்பிவிட, கண் விழித்த இந்துமதி அறையைவிட்டு வெளியே வந்து “அப்பா!” என்று லேசாய்க் குரலை உயர்த்தி அழைத்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த தந்தைக்குப் பின்புறமாய் சென்று அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“அப்பா என்ன விட்டுட்டு காபி குடிச்சிட்டீங்களாப்பா?”

“இல்ல இந்துக் கண்ணு. நீ வராம நா என்னிக்குமா காபி குடிச்சிருக்கேன்”

“என் செல்ல அப்பா!” அப்பாவின் தோளில் தன் முகத்தைப் பதித்தாள் இந்து.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 4 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

கலக்கம் – கதை – எம்.மனோஜ் குமார்

அனந்தபுரி விரைவு ரயில் வண்டியில் இரவு பத்து மணிக்கு எல்லா இருக்கைகளும் படுக்கைகளாகி இருந்தன.

ஸ்வேதா தனது இருக்கை எண் ஏழில் அமர்ந்து அதே ரயிலில் மூன்று பெட்டிகள் தள்ளி அமர்ந்திருக்கும் தோழி தாமிராவிடம் அலைபேசி வழியாக பேசிக் கொண்டிருந்தாள்.

Continue reading “கலக்கம் – கதை – எம்.மனோஜ் குமார்”

அணை உடைந்த கதை – க.வீரமணி

“ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் போன்ற தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில், யாரோ மாடு மேய்க்கிற பெண் சாமி வந்து ஆடி அருள் வாக்கு சொல்வதை நம்பிக் கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து உறுதியாகக் கட்டியுள்ள அணை உடைந்து விடும்; அதை தடுக்க வேண்டும் என்று ஒரு ஊரே திரண்டு வந்து மனு கொடுக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?” என்று கலெக்டர் தலையில் அடித்துக் கொண்டார்.

Continue reading “அணை உடைந்த கதை – க.வீரமணி”