பள்ளிக்குச் செல்லவில்லை!

பள்ளிக்குச் செல்லவில்லை

அங்கே வேலை நடந்து கொண்டிருந்தது. பள்ளிவாசலை புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் கூட ஐந்து வேளை தொழுகையையும் தவறவே விட்டதில்லை பக்கீர்.

Continue reading “பள்ளிக்குச் செல்லவில்லை!”

கார் ஓட்ட கத்துக்க வேண்டும்!

அறிவுரை

கோடை விடுமுறையில் ‘கார் ஓட்ட கத்துக்க வேண்டும்’ என்ற தனது ஆசையை அம்மாவிடம் சொல்லி, அப்பாவிடம் சிபாரிசு செய்ய கெஞ்சி கேட்டான் பிளஸ் டூ படிக்கும் தனுஷ்.

Continue reading “கார் ஓட்ட கத்துக்க வேண்டும்!”

துப்பறியும் கண்டக்டர்!

துப்பறியும் கண்டக்டர்

1990களில், தமிழ்நாடெங்கும் தங்க ரதம் போல ‘திருவள்ளுவர் எக்ஸ்பிரஸ்‘ பஸ்கள் போக்குவரத்தில் கோலோச்சின.

அனைத்து பஸ்களும் ஒரே மாதிரி இருந்ததால், பஸ் முன்னாலும் பின்னாலும் உள்ள அறிவிப்பு பலகையை சரியாக பார்த்துக்கொண்டு ஏற வேண்டும்.

Continue reading “துப்பறியும் கண்டக்டர்!”

பாட்டியின் புலம்பல்!

பாட்டியின் புலம்பல்

கூடலூரில் முதுமையால் தளர்ந்த ஒரு மூதாட்டி இருந்தாள். வயதாகியபோதும் நாள் முழுவதும் பரபரப்புடன் ஏதாவது செய்து கொண்டிருப்பாள் அவள்.

களைப்படையும் போது ஒவ்வொரு முறையும் அவள் “எமதர்மராஜா! எப்போதடா என்னை அழைத்துக் கொண்டு போகப் போகிறாய்? எத்தனை காலம் இந்த உலகத்தில் கிடந்து நான் துன்பப்படுவேன்?” என்று சலித்துக் கொள்வாள்.

Continue reading “பாட்டியின் புலம்பல்!”

மயிலிறகு உலகம்!

மயிலிறகு உலகம்

வீட்டுப்பாடம் செய்யாததால் ரமா டீச்சர் நோட்டை தூக்கி எறிந்ததில், நான் அதில் வைத்திருந்த சிறிய மயிலிறகு எங்கோ விழுந்து தொலைந்து விட்டது.

வீட்டுக்கு வந்து அக்காவிடம் அவள் வைத்திருக்கும் மயிலிறகை கேட்டதில் சண்டை வந்து அவள் என் தலையில் குட்ட, நான் அவளை திரும்பி அடிக்கும்போது அம்மா பார்த்து விட, “பொட்ட புள்ளையை கைநீட்டி அடிக்கிறாயே?” என்று முதுகில் விரல் ரேகை பதியும் அளவுக்கு இரண்டு அடியை போட்டு விட்டாள்.

இப்படி நாலா பக்கமும் அடி விழ நான் அழுது கொண்டே திண்ணையில் அமர்ந்திருந்தேன்.

ஒரு மயிலிறகு கேட்டது குற்றமாடா?

அப்போதுதான் திலகா அக்கா 16 வயதினிலே ஸ்ரீதேவி போல் துள்ளிக் குதித்து என் வீட்டுக்குள் வந்தாள். தன் வீட்டில் வாழைமரம் விழுந்து விட்டதால், வாழைத்தண்டை வெட்டி ஒரு பை நிறைய எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள்.

Continue reading “மயிலிறகு உலகம்!”