எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும்

எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும்

கதிரும், கோகுலும் கல்லூரி மாணவர்கள். இணை பிரியாத நண்பர்களும் கூட. ஒருநாள் கல்லூரிவிட்டு பேசிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்த‌னர்.

அன்று கல்லூரி விழாவிற்கு வந்த எழுத்தாளரைப் பற்றிய‌ பேச்சைத் தொடங்கினான் கதிர்.

“இன்னைக்கு எழுத்தாளர் அருமையாக பேசினார். அவரின் படைப்புகள் மிகவும் அருமையானவை.”

“என்னடா மச்சி சொல்ற? அவரோட எழுத்துக்கள் அவ்வளவு நல்லாவா இருக்கும்?” Continue reading “எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும்”

சுனை சாமியார் – சிறுகதை

சுனை சாமியார்

”சுனை சாமியார் பத்தி தெரியுமா? தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா? அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட், டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும் இருக்கான். என்ன, பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற மாதிரி. அவ்வளவு தான். மத்த‌படி நம்மள மாதிரி தான் பார்க்கிறதுக்குத் தெரியும்” என்ற மதினியின் வாயைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான் சரவணன். Continue reading “சுனை சாமியார் – சிறுகதை”

கருணையின் சிகரம் – சிறுவர் கதை

கருணையின் சிகரம்

நமக்கு நன்மை செய்பவர்களை எந்த சூழ்நிலையிலும் புறந்தள்ளக் கூடாது என்பதை கருணையின் சிகரம் என்ற இக்கதை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பச்சை வனம் என்ற காட்டில் ஓங்கி உயர்ந்த மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் ஏராளமான பறவைகள் பகலில் வந்து அமரும்.

காக்கை, குருவி, செம்பருத்தான் உள்ளிட்ட பறவைகள் கூடுகட்டி வசித்து வந்தன.

அம்மரத்தில் இருந்த பொந்தில் கிளி ஒன்று வசித்து வந்தது. Continue reading “கருணையின் சிகரம் – சிறுவர் கதை”

தாயின் மணிக்கொடி – சிறுகதை

தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்ற பாரதியாரின் பாடலை, தன்னுடைய மகளுக்கு சுதந்திர தினத்தில் பாடுவதற்கு ராகத்துடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பரதன்.

பரதனின் மகள் ரம்யா கோவையின் பெரிய சிபிஎஸ்சி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

தமிழில் பாடல் முழுவதையும் மனப்பாடம் செய்து ராகத்துடன் பாடுவது என்பது பெரிய தவமாகத்தான் இருந்தது ரம்யாவிற்கு. Continue reading “தாயின் மணிக்கொடி – சிறுகதை”

பசியைப் போக்குவோம் – சிறுகதை

பசியைப் போக்குவோம்

மண்வாசனை மயக்க, மழை லேசான தூரலுடன் தொடங்கி, விரைவான துளிகளாய் மண்ணைக் குழப்பியது.

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷாம், பொழிகின்ற மழையை ரசித்துக் கொண்டே சாப்பிட்டான்.

ஒருஅகலமான தட்டில் சிக்கன் பிரியாணியும், அவித்த முட்டையும், பொறித்த கோழிக்கறி துண்டுகளும் நிரம்பி வழிந்தன. ஷாம் பாதி சாப்பிட்டுவிட்டு மீதியைத் தட்டிலேயே வைத்தான். Continue reading “பசியைப் போக்குவோம் – சிறுகதை”