ஞானம் பிறந்தது – சிறுகதை

ஞானம் பிறந்தது - சிறுகதை

கம்பெனியிலிருந்து டெலிவரிக்காகக் கிளம்பிக் கொண்டிருந்த சமயம் சக ஊழியர் ஒருவர், “சரவணா, உனக்கு போன்” என்றதும், ட்ரை சைக்கிளை அப்படியே நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே ஓடினான் சரவணன்.

சரவணனின் பக்கத்து வீட்டிலிருந்து பேசினார்கள். வள்ளிக்கு வலி எடுத்துவிட்டதாகவும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல உடனே கிளம்பி வரும்படியும் சொன்னார்கள்.

சரவணனுக்கு கையும் காலும் ஓடவில்லை. முகத்தில் திகிலும் பரபரப்பும் ஒருசேரத் தோன்றின.

Continue reading “ஞானம் பிறந்தது – சிறுகதை”

உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை

வெள்ளம் போல விரிந்து பரவும்

வினையின் தொற்று வாராமல்

மெள்ள அறிவை மிகவே கூட்டி

மனதும் உடலும் மாசுநீக்கிக்

Continue reading “உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை”

சைக்கிள் – சிறுகதை

சைக்கிள் - சிறுகதை

‘சைக்கிள் வாங்குவது’ என்பது அருணகிரியின் குழந்தைகள் ஒவ்வொருத்தருடைய பல வருட‌ கனவு.

ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் எல்லோரும் படித்தார்கள்.

முதலாவதாக அந்த பள்ளியில் போய் சேர்ந்தது மூத்த மகன்  இசக்கி. அடுத்து இரண்டு ஆண்டுகள் சென்று இரண்டாவது மகன் வேலன்.

இவ்வாறு இரண்டு இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் பிள்ளைகள் ஒவ்வொருத்தரும் போய் அந்த பள்ளியில் சேர்ந்தார்கள். கடைசியாக கடைக்குட்டி கல்யாணியும் வந்து சேர்ந்தாள். 

Continue reading “சைக்கிள் – சிறுகதை”

தனிமை தண்டனை அன்று – கவிதை

ஒளியும் நீங்கினால் நிழலும் துணையில்லை
விழியும் நீங்கினால் வழியும் நிலையில்லை

பாதையின் படிமம் பாதத்தை நீங்கிடும்
கீதையில் படிந்த கீர்த்தனை விளங்கிடும்

Continue reading “தனிமை தண்டனை அன்று – கவிதை”

விருப்பம் – கவிதை

நீ என்பதில் நானும் இருக்கிறேன் 
அதனால் தான் என் விருப்பத்தைச் சொல்கிறேன்

எனக்கான பாதையில் பயணிக்கிறேன்
அங்கிருந்து தான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்

தெரிந்தோ தெரியாமலோ
நான் அங்கேயே நிற்கிறேன்

Continue reading “விருப்பம் – கவிதை”