மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை

மாடென்று எதனைச் சொல்வீர் - சிறுகதை

“40 ஆயிரத்தை கொடுத்து ஒரு கிழ மாட்டை வாங்கி வந்திருக்கியே?” என்று ஊரில் உள்ள எல்லோரும் மாணிக்கத்திடம் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

மாணிக்கம் மாடு வாங்குவதில் ஒன்றும் புதிய ஆள் இல்லை. கடந்த 20 வருடமாக பால் கறந்து வியாபாரம் செய்து வருபவர்.

மாணிக்கம் மாடுகளை குடும்ப உறுப்பினர்களாக பாவிப்பார். மாட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறி விடுவார்.

மாடுகள் வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் மனிதர்களுக்கு செய்வது போலவே ஈமக்கிரியைகள் செய்து போற்றுவார்.

Continue reading “மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை”

மனமே – கவிதை

மனம் என்பது மனிதன் ஆகலாம்
மனிதன் என்பவன் மனம் ஆகலாம்

நீ கூட்டம் கூட்டமாக எங்கே ஊர்ந்து
கொண்டு போகிறாய் மனமே?

நீ கணித்த இலக்கு அடுத்த நிமிடம்
நிரந்தரமற்றது என்று அறிவாயா மனமே?

நீ உன்னை அறியாமல் எத்தனை சக
மனதினைக் காயப்படுத்தினாய் மனமே?

Continue reading “மனமே – கவிதை”

அழகுக்கு அழகு – சிறுகதை

அழகுக்கு அழகு

உள்ளம் முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பவானி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

சுவர்க் கடிகாரத்தின் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

‘எப்போது சாப்பிட்டு முடிப்பார்? பேச்சைத் துவங்கலாம்’ என பவானி பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள். மகன்கள் இருவரும் வெளியே சென்றிருந்தனர்.

பெரிய பெண் சாந்தி பூஜையறையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜைக்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்க, சாந்தியின் தங்கை தீபிகா டி.வி. முன் அமர்ந்து அழகுக் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணின் அலங்காரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

Continue reading “அழகுக்கு அழகு – சிறுகதை”

மாரிக் கால சிந்தனை – கவிதை

மாரி என்றால் மழை என்று பொருள். 2021ம் ஆண்டு சென்னையின் பெருமழை பாதிப்பைப் பார்த்து வருத்தமும் கோபமுமாய் எழுந்த கவிதை.

ஏரி வாய்க்காலைத் தூக்கி விழுங்கியோர்
தப்பிப் பிழைத்த லரிது

காரிகாரி உமிழ்ந்தும் கேட்காத மக்கள்
மாரியால் ஆவார் மாக்கள்

வீடுவீடென்று மாடியில் மாடி கட்டியோர்
நாறுநாறென்று நாறுவரே மாரியால்

Continue reading “மாரிக் கால சிந்தனை – கவிதை”

பாகப்பிரிவினை – ‍சிறுகதை

பாகப்பிரிவினை

“அண்ணே! மேல கெடக்கியா? கீழ கெடக்கியா?” என்று கும்மிருட்டுக்குள் கையில் வீச்ச அரிவாளை வைத்து கொண்டு கேட்டான் வேத முத்து.

அடுத்த நொடியே “கீழ கெடக்கேன் தம்பி” என்று ஈன முத்துவிடம் இருந்து பதில் வந்தது.

அடுத்த நொடியே கையில் இருந்த வீச்ச அரிவாளை இறுகப் பற்றிக் கொண்டு ஓங்கி வெட்டினான் வேத முத்து.

அதற்கடுத்த நொடியில் ‘ஆ’ வென அலறினான் ஈன முத்து.

“அண்ணே! என்ன ஆச்சி?” என்றான் வேத முத்து.

உயிருக்கு போராடிய நிலையில் “என்னைய வெட்டிட்டயடா தம்பி” என்றான் ஈன முத்து.

ஈன முத்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் வேத முத்து.

Continue reading “பாகப்பிரிவினை – ‍சிறுகதை”