திருத்தணிகை நொண்டிச் சிந்து

முருகன்

கந்தாவுன் பேர்சொல்லி யே-நாங்கள்
காவடி தூக்கினோம் பாவடித் தோம்
சிந்தாலே பாட்டிசைத் தே-உன்
சீர்பல போற்றவே ஓர்ந்துநின் றோம்

மாமலை மீதிருந் தே-இந்த
மாநிலம் நோக்குதல் தானறிந் தோம்
கோமலை உன்மலை யே-எந்தக்
குன்றமும் நின்னடிக் குன்றிடு மே

Continue reading “திருத்தணிகை நொண்டிச் சிந்து”

ஒத்திகை – சிறுகதை

சாம்பு சாஸ்திரிகள் சந்தியாவந்தனத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு ‘சிவ சம்போ, மகாதேவா’ என முனங்கியபடியே பஞ்ச பாத்திரத்தை உத்தரணியுடன் சேர்த்துப் பிடித்தவாறே அதிலிருந்து ஜலத்தைத் துளசி மாடத்தில் விட்டார்.

அவரது வாய் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தது. வலது கை விரல்கள் எண்ணியபடியும், எண்ணி முடித்ததற்கு அடையாளமாக இடது கை விரல்கள் மடங்கிக் கொண்டும் இருந்தன.

Continue reading “ஒத்திகை – சிறுகதை”

யார் வருவா மீட்டெடுக்க?

கூர்மையான மூக்கு வச்சு…

கூட இரண்டு இறக்கை வச்சு…

கூட்டமாக கூடி நின்று…

கோகோ என்ற சத்தத்துடன்…

நாங்க விட்ட ராக்கெட்டு…

Continue reading “யார் வருவா மீட்டெடுக்க?”

அந்த புத்தகம் – சிறுகதை

நீதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.

அந்த கைதியின் வழக்கு இருபது வருடமாய் இழுபறியில் இருக்கின்றது. இப்போது தான் தீர்ப்பு வருகிறது.

அவன் கைது செய்யப்பட்ட போது மொத்த ஊடகமும் பத்திரிக்கையும் அந்த வழக்கை விசாரித்து அவரவர் தீர்ப்புகளை வழங்கி விட்டன.

ஆனால் என்ன செய்வது அரசாங்கம் சொல்லும் தீர்ப்பே இறுதியான முடிவு, அதனால் மக்களும் ஊடகங்களும் எடுத்த முடிவு கடலில் கரைத்த உப்பானது.

Continue reading “அந்த புத்தகம் – சிறுகதை”

ரணங்களின் நிறங்கள் – சிறுகதை

பிரபல எழுத்தாளர் வைதேகி தன் வீட்டின் ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி நிகழ்ச்சியில் ஆர்வமுடன் லயித்திருந்தாள்.

டிவி தொகுப்பாளர் அடுத்து வரும் நிகழ்ச்சியை ஸ்டைலான உச்சரிப்பில் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடுத்து நாம் பார்க்க உள்ள நிகழ்ச்சி பிரபலங்களின் மாமியார்களுடன் ஒரு நேர்காணல்.

Continue reading “ரணங்களின் நிறங்கள் – சிறுகதை”