வயிறும் வாழ்வும் பற்றி தெரியுமா?

வயிறும் வாழ்வும் பற்றி தெரியுமா?

வயிறும் வாழ்வும் பற்றி தெரியுமா? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய, தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

எண் சாண் உடம்பு என்று நமது எழில் நிறைந்த உடம்பினை அளந்து, அழகுறக் கூறிச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள்.

அதிலே உள்ள வயிற்றுக்கும் ஓர் வரம்பு கட்டுவதுபோல, ஒரு சாண் வயிறு என்றும் உறுதிப்படுத்திக் காட்டியிருக்கின்றனர். Continue reading “வயிறும் வாழ்வும் பற்றி தெரியுமா?”

தொந்தி குறைக்க சுலபமான வழிகள்

தொந்தி குறைக்க சுலபமான வழிகள்

தொந்தி குறைக்க சுலபமான வழிகள் என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய, தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

இன்று நல்ல நாள்!

உங்கள் எண்ணத்திலே புதிய எழுச்சி, புரட்சி! அதன் விளைவாக எழுந்த முயற்சி…. மகிழ்ச்சி!

என்றோ ஒருநாள் தொடங்கி, தொடர்ந்து, வளர்ந்து, சுமையாக மாறிவிட்ட இந்தத் தொந்தியை, எப்படியாவது தொலைத்துத் தலைமுழுகி விடவேண்டும் என்ற வேகத்தின் வெள்ளத்திற்குக் கரைகட்டி விட்ட கடமை நிறைந்த நாள் இந்நாள்.

ஆமாம், புதிய முயற்சி வெள்ளம் பொங்கிப் புரண்டு, நுங்கும் நுரையுமாக செல்வதை, கரைகட்டி விட்டதுபோல,  நல்லவழி காட்டவே தொந்தியை குறைக்க சுலபமான வழிகள் வரும் வாரங்களில் வரவிருக்கிறது.

Continue reading “தொந்தி குறைக்க சுலபமான வழிகள்”

உண்மை

பெரிய உண்மை

ஊருல காட்டுல மேட்டுல எல்லாம் அமைதியா இருக்குது

உச்சியில் வானத்து நட்சத்திரம் நல்லா இப்ப தெரியுது

காரு வண்டியினு ஓடுன ரோடு காலியாகவே கிடக்குது

காற்றுங்கூட தூசியில்லாம சுத்தமாகவே வீசுது Continue reading “உண்மை”

கொரோனா தனிமைப்படுத்தலில் பொழுது போக

புத்தகம்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

கொரோனா தனிமைப்படுத்தலில் பொழுது போக, எனக்குப் பெரிதும் உதவியாக இருப்பது

புத்தகங்கள் : 32% (13 வாக்குகள்)

சமூக வலைதளங்கள் : 23% (9 வாக்குகள்)

தொலைக்காட்சி : 15% (6 வாக்குகள்)

சமையல் : 15% (6 வாக்குகள்)

விளையாட்டு : 15% (6 வாக்குகள்)