எள் – எண்ணெய் வித்துகளின் ராணி

எள் - எண்ணெய் வித்துகளின் ராணி

எள் பண்டைய காலம் தொட்டு உணவுப் பழக்கத்தில் இருந்து வரும் முக்கியமான உணவுப் பொருளாகும். இது மனிதன் அறிந்த எண்ணெய் வித்துகளில் மிகவும் பழமையானது.

மற்ற எண்ணெய் வித்துக்களைவிட நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருப்பதால் இது எண்ணெய் வித்துக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.

இதனுடைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் தீர்க்கும் பண்புகளின் காரணமாக இது உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பராம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Continue reading “எள் – எண்ணெய் வித்துகளின் ராணி”

கசகசா நன்மையா? தீமையா?

கசகசா

கசகசா நன்மையா? தீமையா? என்ற கேள்விக்கான பதிலை இக்கட்டுரையின் இறுதியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சமீபத்தில் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்களை வெளிநாட்டுக்கு வாங்கிச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் அவர். Continue reading “கசகசா நன்மையா? தீமையா?”

பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை

பூசணி விதை

பூசணி விதை உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைய‌ கொண்டுள்ளது. இந்த சிறிய விதைக்குள் உள்ள அபரிதமான சத்துக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் நண்பன் கொடுத்து இதனை தின்றிருக்கிறேன். அவனுடைய அம்மா சமையலுக்கு வாங்கிய பூசணிக்காயில் இருந்த விதைகளை, விறகு அடுப்பு சாம்பலில் தோய்த்து உலர வைத்துப் பதப்படுத்தியதாகக் கூறினான். லேசான இனிப்புச் சுவையுடன் அருமையாக இருந்தது.

Continue reading “பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை”

வால்நட் அறிவுத்திறனின் குறியீடு

வால்நட்

மனித மூளையைப் போன்ற உணவுப் பொருளைப் பார்த்திருக்கிறீர்களா?. அதுவே வால்நட் என்னும் கொட்டை ஆகும்.

வால்நட் என்பது ஜுக்லான்ஸ் ரெஜியா என்னும் மரத்திலிருந்து கிடைக்கும் உண்ணக்கூடிய விதைகள் ஆகும்.

இது வட்ட வடிவமாக ஒற்றை விதையினைக் கொண்டுள்ளது. இது கடினமான ஓட்டினுள் வைக்கப்பட்டு உள்ளது. Continue reading “வால்நட் அறிவுத்திறனின் குறியீடு”

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா என அழைக்கப்படக் காரணம், கண் நோய்கள் வராமல் தடுக்கும் ஊட்டச் சத்துக்கள் நிறைய அதில் இருப்பதே ஆகும்.

பிஸ்தா எல்லோருக்கும் பிடித்தமான பருப்பு ஆகும். இதன் இனிப்பு சுவை மிகவும் பிரபலம். ஆதலால்தான் ஐஸ்கிரீம், இனிப்புகள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றில் இதனுடைய சுவை பலரையும் கவர்ந்திழுக்கிறது.

இது மிகவும் பழங்காலம் முதல் அதாவது கிமு 6000-ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிற்றுண்டியாக கொறித்தும்,  உணவுப் பொருட்களோடு சேர்த்து சமைத்தும் உண்ணப்படுகிறது. Continue reading “கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா”