அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்

இந்தியாவின் அனைத்து பாகங்களிலும், குறிப்பாக சூரிய வெளிச்சமும், ஈரப்பசையுடன் கூடிய தட்ப வெப்ப நிலைப் பகுதிகளில் அருகம்புல் வளர்கிறது.

‘சைனோடோன்’ (Cynodon), ‘டேக்டைலோன் பெர்ஸ்’ (dactylon pers) என்பது அருகம்புல்லின் தாவரவியல் பெயர்.

வ‌டமொழியில் ‘தூர்வா'(Dhoorva) என்றும், இந்தியில் ‘தூப்’ (Dhoob) எனவும் அழைக்கப்படுகிறது.

Continue reading “அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்”

உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை?

உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை?

நாம் நலமாக வாழ நம்முடைய உள்ளுறுப்புக்கள் மற்றும் புறஉறுப்புக்கள் ஆரோக்கியான நிலையில் இருப்பது மிகவும் அவசியமானது.

நாம் சில செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது, அவை நம்முடைய உடல் உறுப்புகளைப் பாதிப்படையச் செய்வதோடு நம்முடைய ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கிறது.

உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை? அவை எவ்விதம் உடல்உறுப்புகளைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பார்ப்போம்.

Continue reading “உடல் உறுப்புகளைப் பாதிக்கும் செயல்பாடுகள் எவை?”

காயமே இது பொய்யடா – ஒர் பார்வை

காயமே இது பொய்யடா

உடலின் வெளிப்புறத்தில் தாக்குதல் ஏற்படுவதால் வரும் பாதிப்பே ‘ட்ரௌமா’ என்று சொல்லப்படுகிறது. ‘ட்ரௌமா’ என்றால் காயம் என்று பொருள்.

வன்முறைத் தாக்குதல் மூலம் உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களைப் பற்றி விரிவாக அலசப்படும் ஓர் அறிவியல் பாடம்தான் ‘ட்ரௌமடாலஜி’ (Traumatology).

விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்து இதில் விரிவாக விளக்கப்படுகிறது.

Continue reading “காயமே இது பொய்யடா – ஒர் பார்வை”

அன்னாசிப் பழம் – மருத்துவ குணங்கள்

அன்னாசிப் பழத்தின் மருத்துவ குணங்கள்

ஆங்கிலத்தில் ‘பைன் ஆப்பிள்’ என்று சொல்லப்படுகிற அன்னாசிப் பழம் எல்லோரும் நன்கு அறிந்ததுதான். மூக்கைத் துளைக்கும் நறுமணம் மிக்க அன்னாசிப் பழம் எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பழம்.

ஆனால், எவ்வளவுபேர் இப்பழத்தை விரும்பி அடிக்கடி சாப்பிடுகிறோம்? எப்போதாவதுதான் சாப்பிடுகிறோம்.

இன்றைய நாளில் இப்பழத்தை எளிதாக சாப்பிடும் அளவுக்கு வியாபாரிகள் சிறுசிறு துண்டுகளாக அழகாக நறுக்கி, கெட்டியான அட்டை கப்புகளில் (Disposable Cups) நிரப்பி, ஸ்பூனுடன் தருகிறார்கள்.

கை படாமல் எடுத்துச் சாப்பிடும் விதமாக‌, ஒவ்வொரு நகரத்திலும் தள்ளு வண்டிகளில் வைத்து இதனை விற்பனை செய்வதைப் பார்க்கிறோம்.

Continue reading “அன்னாசிப் பழம் – மருத்துவ குணங்கள்”