கல்யாணப்பூசணி – மருத்துவ பயன்கள்

கல்யாணப்பூசணி

கல்யாணப்பூசணி காய், விதைகள், இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; ஆண்மையயைப் பெருக்கும்; நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், காக்கை வலிப்பு, பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும். பதிவுரிமை செய்யப்பட்ட பல இலேகியங்கள், நெய் வகைகள் காயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

Continue reading “கல்யாணப்பூசணி – மருத்துவ பயன்கள்”

உத்தாமணி – மருத்துவ பயன்கள்

உத்தாமணி

உத்தாமணி முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்ப காரப் பண்புகளும் கொண்டது. குடைச்சல், குத்தல், வீக்கம், நடுக்கம், வலி, இரைப்பு, இருமல், கோழை ஆகியவற்றை நீக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; வாந்தி உண்டாக்கும்; பசியைத் தூண்டும். இலைச்சாறு மூக்கடைப்பை நீக்கும்.

Continue reading “உத்தாமணி – மருத்துவ பயன்கள்”

இம்பூரல் – மருத்துவ பயன்கள்

இம்பூரல்

இம்பூரல் முழுத் தாவரமும் இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்தும். பித்த நீரைப் பெருக்கும். வயிற்று இரைச்சல், விக்கல் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.

Continue reading “இம்பூரல் – மருத்துவ பயன்கள்”

ஆவாரை – மருத்துவ பயன்கள்

ஆவாரை

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும்.

Continue reading “ஆவாரை – மருத்துவ பயன்கள்”

ஆரை – மருத்துவ பயன்கள்

ஆரை

ஆரை, சத்து மிகுந்த கீரையாகும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். தாகம் தணிக்கும். இது இனிப்புச் சுவையுடையது. பசியைத் தூண்டும் ஆண்மையுணர்வைப் பெருக்கும், விந்து உற்பத்தியை அதிகரிக்கும், வெள்ளைப்படுதலையும் கட்டுப்படுத்தும்.

Continue reading “ஆரை – மருத்துவ பயன்கள்”