பிரண்டை – மருத்துவ பயன்கள்

பிரண்டை

பிரண்டை உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும். Continue reading “பிரண்டை – மருத்துவ பயன்கள்”

கஸ்தூரி மஞ்சள் – மருத்துவ பயன்கள்

கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் எனப்படுவது காய்ந்த கிழங்குகளே ஆகும். கத்தூரி மஞ்சள் என்றும் கூறப்படும். கஸ்தூரி மஞ்சள் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது.

கஸ்தூரி மஞ்சள் பெரும்பாலும், வெளி உபயோகத்திற்கான மருந்தாகப் பயன்படுகின்றது. அரைத்துப் பசையாக்கி தேய்த்துக் குளிக்க கரப்பான், கிருமிநோய்கள் போன்றவற்றைப் போக்கும். தோல் பளபளப்பாகும். Continue reading “கஸ்தூரி மஞ்சள் – மருத்துவ பயன்கள்”

கற்பூரவல்லி – மருத்துவ பயன்கள்

கற்பூரவல்லி

கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப் பெயரும் சில‌ பகுதிகளில் வழங்கப்படுகிறது. அடர்ந்த புதர்களில் பெரும்பாலும் தேன்கூடுகளைக் காணமுடியும்.
தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நகரத்தில் வசிப்பவர்கள் இந்தச் செடியைத் தொட்டியிலும் வளர்த்துப் பயன்பெறலாம். Continue reading “கற்பூரவல்லி – மருத்துவ பயன்கள்”

கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள்

கறிவேப்பிலை

கறிவேம்பு இலை என்பதையே கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை என நாம் குறிப்பிடுகிறோம். கறிவேப்பிலை சமையலில் மணமூட்டும் முக்கியமான இலையாகும்.

கறிவேப்பிலைக்கென்று தனியான வாசனை உண்டு. சாம்பார், குழம்பு, இரசம் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும். Continue reading “கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள்”

கடுகு – மருத்துவ பயன்கள்

கடுகு

கடுகு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. குன்மம், வாதநோய் ஆகியவைகளைக் குணமாக்கும்; ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தும்; வாந்தியுண்டாக்கும்; சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்.

கடுகு பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும் மருத்துவக் குணம் உடையது, எனவே கடுகை ஊறுகாய், தொக்கு போன்றவற்றிலும் சேர்க்கிறார்கள். இதனால், இவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படும். Continue reading “கடுகு – மருத்துவ பயன்கள்”