தயிர் வடை செய்வது எப்படி?

Thayir Vadai

செய்முறை

உளுந்து வடை தயார் செய்யவும். பிறகு அதை வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயிரில் போடவும்.

தயிருடன் சேர்க்க வேண்டியவை
தயிர் : 200 கிராம்
தேங்காய் : ¼ மூடி
பச்சைமிளகாய் : 3
கடுகு : 1 டீஸ்புன்
உப்பு : சிறிதளவு

தேங்காய், பச்சை மிளகாய், உப்பு முதலியவற்றை மிக்சியில் அரைத்து தயிரில் கலக்கவும். அதனுடன் கடுகு தாளித்து கொட்டவும். தயிர் வடை ரெடி.

 

உளுந்து வடை செய்வது எப்படி?

சுவையான உளுந்து வடை

உளுந்து வடை என்பது அருமையான சிற்றுண்டி ஆகும். இது சிறுவயது குழந்தைகளும் கொடுப்பதற்கு ஏற்றது.

வழிபாட்டின் போதும், பண்டிகைகளின் போதும், விருந்துகளின் போதும் இதனை செய்வது நம்முடைய பராம்பரிய வழக்கம். Continue reading “உளுந்து வடை செய்வது எப்படி?”

ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி?

Javvarishi Payasam

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி : 200 கிராம்
சீனி : 300 கிராம்
தண்ணீர் : 500 மி.லி.
தேங்காய் : 2 மூடி (துருவி பால் எடுக்கவும்)
முந்திரிபருப்பு : தேவையான அளவு
ஏலக்காய் : தேவையான அளவு

 

செய்முறை

அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.

ஜவ்வரிசி வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும்.

நெய்யில் முந்தரி, ஏலக்காய் வறுத்து பாயசத்தில் போடவும். சுவையான ஜவ்வரிசி பாயசம் தயார். சூடாக பரிமாறவும்.

 

ரவா கேசரி செய்வது எப்படி?

Rava Kesari

தேவையான பொருட்கள்

ரவை  –  200 கிராம் (1 பங்கு)

சர்க்கரை – 200 கிராம் (1 பங்கு)

தண்ணீர் –  400 மி.லி. (2 பங்கு)

நெய் –  தேவையான அளவு

முந்திரி பருப்பு –  தேவையான அளவு (தோராயமாக‌ 10)

ஏலக்காய் – தேவையான அளவு (தோராயமாக‌ 4)

கேசரி பவுடர் – சிறிதளவு Continue reading “ரவா கேசரி செய்வது எப்படி?”

சேமியா கேசரி செய்வது எப்படி?

Semiya Kesari

தேவையான பொருட்கள்

சேமியா : 500 கிராம்
சர்க்கரை : 400 கிராம்
தண்ணீர் : 400 மி.லி.
நெய் : தேவையான அளவு
முந்திரி பருப்பு : 2 (தேவையான அளவு)
ஏலக்காய் : 4 (தேவையான அளவு)
கேசரி பவுடர் : சிறிதளவு

 

செய்முறை

சேமியா, முந்திரிப்பருப்பு தனித்தனியாக நெய்யில் வறுக்கவும். வாணலியில் தண்ணீர் கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும்.

சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து முந்திரிபருப்பு, மீதியுள்ள நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும். பிறகு ஏலப்பொடி சேர்க்கவும்.

பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும். சுவையான சேமியா கேசரி தயார்.