முந்திரிப்பருப்பு பர்பி செய்வது எப்படி?

cashew_burfi

தேவையான பொருட்கள்

முந்திரிப்பருப்பு : 1 கப்

மைதா மாவு : 1 கப்

சீனி : 3 கப்

தண்ணீர் : ¼ கப்

நெய் : 2 கப்

 

செய்முறை

முந்திரிப் பருப்பை லேசாக வெறுஞ்சட்டியில் சூடாக்கி பொடி பண்ணவும். தண்ணீரில் சீனி, முந்திரிப்பருப்பு மாவு போட்டு கொதிக்க விடவும்.

கொதித்த பின் மைதாவை சிறிது சிறிதாக தூவி கட்டிவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டும் போது சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும்.

பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி வில்லைகளாக போடவும். சுவையான முந்திரிப்பருப்பு பர்பி ரெடி.

 

நாண் செய்வது எப்படி?

Naan

தேவையான பொருட்கள்

மைதா : 500 கிராம் (8 நாண்)

ஈஸ்ட் : ¼ தேக்கரண்டி (வெதுவெதுப்பான சீனி சேர்த்த தண்ணீர் கலந்து 8 நிமிடம் வைத்து இருக்கவும்.

வெண்ணெய் : 1 தேக்கரண்டி

உப்பு : 1 தேக்கரண்டி

 

செய்முறை

மைதாவைச் சலித்து பாத்திரத்தில் போடவும். வெண்ணெய், உப்பு, ஈஸ்ட் தண்ணீர் இவற்றைச் சேர்த்து ஒன்று சேரப் பிசையவும்.

பின் தேவையான அளவு பூரி மாவு மாதிரி இருக்கும் படி தண்ணீர் சோத்து ஈரத் துணி போட்டு மூடி தனியே 3 – 4 மணி நேரம் அடுப்புச்சூடு அல்லது எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மேல் வைத்தால் மாவு நன்கு ரொட்டி மாதிரி எழும்பி விடும்.

அந்த மாவை புரோட்டா அளவு பெரிய உருண்டைகளாக உருட்டி எடுத்து கனமானப் பலகையில் நீண்ட வட்ட முட்டை வடிவில் இட்டு, தோசைக்கல்லில் போட்டு சப்பாத்தி மாதிரி எடுக்கலாம் அல்லது தந்தூரி அடுப்பிலும் போட்டு எடுக்கலாம்.சுவையான நாண் ரெடி.

 

உருளைக்கிழங்கு போளி செய்வது எப்படி?

Potato Poli

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு : 1 மேஜைக்கரண்டி

உளுந்தம்பருப்பு : 1 மேஜைக்கரண்டி முந்திரிப்பருப்பு : 10 மைதாமாவு : 2 கப்

பச்சைமிளகாய் : 1 கடுகு : 1 தேக்கரண்டி

உப்பு : 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி

உருளைக்கிழங்கு : 10 மல்லி, கருவேப்பிலை : சிறிது

 

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லியிலை போட்டு வதக்கி அதனுடன் வேக வைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள், பொடி செய்த தூள் கலந்து கிளறி இறக்கி வைக்கவும்.

மைதாமாவில் உப்பு, சிறிது எண்ணெய், தண்ணீர் சேர்த்து போளிக்கு மாதிரி பிசைந்து வைத்துக்கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையும் எடுத்து கையில் விரித்து நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி போளிக்கு மாதிரி இலையில் விரித்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் போளியைப் போட்டு சுற்றி டால்டா அல்லது நெய் ஊற்றி இரண்டு பக்கங்களையும் வேக வைத்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு போளி ரெடி.