உண்ணும் உணவை வணிகமாக்கி
உழவைத் தொழிலாய் மாற்றுதற்குப்
பண்ணும் செயலே செறிவூட்டம்
பன்னாட் டரசின் சதித்திட்டம்
எண்ணும் எழுத்தும் எப்பொழுதும்
ஏமாற் றுதற்கே துடிதுடிக்கும்
மண்ணும் உயிரும் இவர்களுக்கு
மாபெரு சந்தை தவிர வேறிலையே!
Category: உணவு
-
அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
-
கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி?
கறிவேப்பிலை சட்னி அசத்தலான சுவையுள்ள ஆரோக்கியமான சட்னி ஆகும். கறிவேப்பிலை சத்து மிகுந்தது. கறிவேப்பிலையை பொதுவாக தாளிதம் செய்யவே பயன்படுத்துகிறோம்.
(மேலும்…) -
தாய்ப்பாலின் மகத்துவம் – ஜானகி எஸ்.ராஜ்
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைவிட மிகச்சிறந்த ஓர் உணவு இருக்க முடியாது. அதிக சத்து மிகுந்த பாலாக தாய்ப்பால் இருப்பதால் நோய்கள் அணுகாதபடி அது குழந்தைகளைப் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் உடலால் மட்டுமின்றி உள்ளத்தாலும் ஆரோக்கியமாக இருக்கும். பாட்டில் பாலை விட தாய்ப்பால் சத்துமிக்க சிறந்த உணவு என மருத்துவரீதியாகவும், பரிசோதனை வாயிலாகவும் இதர ஆய்வுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
(மேலும்…)