சுதந்திரக் கூச்சல்

சுதந்திர கூச்சல்

‘சுதந்திரக் கூச்சல்’ என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

பயிற்சி மொழி, ‘தமிழா, ஆங்கிலமா?’ என்ற சிக்கலில் உரிமைப் பிரச்சனை ஒன்றும் எழுப்பப்படுகின்றது.

பயிற்சிமொழி எது? என்பதில் இறுதியாக முடிவு எடுக்கும் உரிமை அல்லது பொறுப்பு, பல்கலைக்கழகத்தினுடையதா? அரசாங்கத்தினுடையதா? என்பதே அந்தப் பிரச்சினை. Continue reading “சுதந்திரக் கூச்சல்”

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம் ஒரு நல்ல கதை. இன்றைய இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயத்தை அழகாக விளக்கும் கதை.

ரவியும், மணியும் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றனர். ஏன் என்றால் அன்று ரசிகர் மன்றம் திறப்பு விழா.

மணிதான் தலைவர்.

தோரணங்களும், கொடிகளும் கட்டி ஒலிப்பெருக்கியில் சத்தமாக பாடல் ஒலித்தது. இளைஞர்கள் கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.

சினிமாவில் நடிக்கும் நடிகருக்காக இளைஞர்கள் இப்படி நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்களே என கந்தசாமி மனம் வருந்தியது.

கந்தசாமி அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியாற்றும் போதே பல ஏழை மாணவர்களுக்குத் தன் சொந்த பணத்தில் உணவிட்டு, பண்டிகை நாட்களில் புத்தாடைகளையும் கொடுத்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர். Continue reading “ரசிகர் மன்றம்”

அரசு வங்கிகள் இணைக்கப்படுவதை நான்

வங்கியில் சேமித்தல்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

அரசு வங்கிகள் இணைக்கப்படுவதை நான்

ஆதரிக்கிறேன் : 59% (24 வாக்குகள்)

எதிர்க்கிறேன் : 41% (17 வாக்குகள்)

 

பொது மொழி எது?

மொழிகள்

பொது மொழி எது? என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

இந்தியாவில் அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப் பெற்ற பதினான்கு மொழிகளில், உருது மற்றும் சமஸ்கிருதம் நீங்கலாக ‘அரசு மொழி’ என்ற சிறப்புக்குரியவை பன்னிரண்டு மொழிகளாகும். Continue reading “பொது மொழி எது?”

ஆசிரியர் – புதுக்குறள்

ஆசிரியர்

 

தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

மனம் நிற்பவரே ஆசிரியர்

 

கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

கற்று கொள்பவரும் ஆசிரியர்

 

அறிவுரை வழங்கி அறவுரை விளக்கி

தெளிவுரை தருபவரே ஆசிரியர்

 

அன்புடன் கண்டிப்பும் ஆதரவும் தந்து

மாண்புடன் வாழ்பவரே ஆசிரியர்

 

அறியாமை நீங்கி மாணவர் அறியாமை

நீக்கி செல்பவரே ஆசிரியர்

 

ஏணியாய் ஏற்றி மாணவரை ஞானியாய்

மாற்றி விடுபவரே ஆசிரியர்

 

உண்மை நேர்மை மென்மை கொண்டு

வன்மை இல்லாரே ஆசிரியர்

 

உரம்போல் வீழ்ந்து மரமாக மாணவரை

உயர்த்தி மகிழ்பவரே ஆசிரியர்

 

அறிவு கனிவு துணிவு தெளிவுகொண்டு

எளிமை உள்ளவரே ஆசிரியர்

 

அறப்பணி அறிந்து பிறப்பணி துறந்து

சிறப்புடன் வாழ்பவரே ஆசிரியர்

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்