கண்ணப்பரின் சிவன் சிலை வடிவானவரே

கண்ணப்பரின் சிவன், சிலை வடிவானவரே

எனக்கு வெகு நாட்களாகக் கண்ணப்ப நாயனார் புராணம் குறித்த ஓர் ஐயம்! அதில், திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ‘குடுமித் தேவர்‘ என்று தான் குறிப்பிடப்படுகிறார்.

கண்ணப்பரும், அர்ச்சகரும் அக்குடுமித் தேவருக்கு மலர்கள் சூடுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற வருணனைகளும் சிவன் உருவச்சிலை வடிவாக இருந்ததையே காட்டுகின்றன.

Continue reading “கண்ணப்பரின் சிவன் சிலை வடிவானவரே”

பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்

செல்லம்மாள் பாரதி

பாரதியை இச்சமூகம் ஒரு மாபெரும் புரட்சியாளனாகக் கொண்டாடி மகிழ்கிறது.

இன்று பல்வேறு அரங்குகளிலும் பாரதியை கொண்டாடுகின்ற அளவிற்கு அவரது மனைவி செல்லம்மாள் நினைவு கூறப்படவில்லை.

அவனோடு இருபத்து ஐந்து ஆண்டுகள் வெறுமை நிறைந்த வறுமை வாழ்க்கை வாழ்ந்த அந்த செல்லம்மாள் தியாக தீபமாய் ஒளிர்கிறாள்.

Continue reading “பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்”

பாலை என்றோர் நிலமுண்டு

பாலை

பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஐவகை நிலங்களில், பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதை மறுத்து, பாலை என்ற ஒரு தனிவகை நிலம் உண்டு என இந்தக் கட்டுரை மூலம் நிறுவ முயற்சி செய்கிறார் காவடி மு.சுந்தரராஜன்.

தொல்காப்பியர் பாலையை ஒரு தனி நிலமாகக் குறிப்பிடவில்லை எனப் பலர் இந்தச் செய்யுளை எடுத்துக் காட்டுவர். அவர் நிலங்களை நான்காகவே இப்பாடலில் காட்டுகிறார்.

மாயோன் மேய காடு உறை உலகமும், 
சேயோன் மேய மை வரை உலகமும், 
வேந்தன் மேய தீம் புனல் உலகமும், 
வருணன் மேய பெரு மணல் உலகமும், 
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச் 
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே ( பொருள் – 5 )

Continue reading “பாலை என்றோர் நிலமுண்டு”

விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

தமிழ்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பது

சரி – 76% (16 வாக்குகள்)

தவறு – 24% (5 வாக்குகள்)