செய்யது ஆசியா உம்மா – சூஃபி ஞானி

செய்யிது ஆசியா உம்மா - சூஃபி ஞானி

செய்யது ஆசியா உம்மா அவர்கள் அல்லாவின் பெருமையை இனிய தமிழில் பாடிய சூஃபி ஞானி. அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் தோன்றியவர்.

தமிழக வரலாற்றில், பல்வேறு மதங்களின் இறைஞான சிந்தனைகள், இறையாண்மைத் தத்துவங்கள் போன்றவை குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.

அக்காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்று அவை, பெரும்பாலான மக்களைப் பண்படுத்தி வழிப்படுத்தின என்றால் மிகையாகாது.

ஏகத்துவக் கொள்கையைப் பறைசாற்றும் சூஃபிசம் ’இஸ்லாத்தின் உள்ளுணர்வு’ வெளிப்பாடாகச் சமூகத்தில் கவனிக்கப் பெற்றது.

இதன் வழி இறையாண்மைக் கொள்கையை, இஸ்லாத்திற்குள் முதன் முதலாக நுழைய வருபவருக்கும், இஸ்லாத்தில் உள்ளவர்களுக்கும் ஆழமான முதிர்ச்சியைத் தர முடிந்தது. ஆன்மீகத்தின் தேடலாகவும் அமைந்தது.

Continue reading “செய்யது ஆசியா உம்மா – சூஃபி ஞானி”

இடுக்கண் களையும் தமிழே வருக – ‍கவிதை

புத்தாண்டே வருக! வருக!

நெடுநாள் தொடரும் நெடுந்துயர் நீக்கி

நெடுந்தூரம் செல்லும் நதியினைப் போல

வெடுக்கென விடுத்து விடையும் கொடுக்க

இடுக்கண் களையும் தமிழே வருக!

Continue reading “இடுக்கண் களையும் தமிழே வருக – ‍கவிதை”

ரசூல் பீவி – சூஃபி ஞானி

ரசூல் பீவி

வணக்கத்திற்கு உரியவர் அல்லாஹ் ஒருவனே’ என்ற‌ ஓரிறைக் கொள்கையை வெளிப்படுத்தும் பல‌ சூஃபி தத்துவ பாடல்களை இயற்றியவர் தென்காசி ரசூல் பீவி ஆவார்.

Continue reading “ரசூல் பீவி – சூஃபி ஞானி”

கண்டனூர் நாகலிங்கய்யா – வேதாந்தக் கவிஞர்

கண்டனூர் நாகலிங்கய்யா

கண்டனூர் நாகலிங்கய்யா வேதாந்தத் தத்துவங்களை அழகாக எளிய தமிழில், அனைத்து வகை மக்களுக்கும் புரியும் வண்ணம் எழுதி உள்ளார்.

வேதாந்த நூல்கள் வாழ்வின் அர்த்தங்களையும் பாதைகளையும் மக்களுக்குப் புரிய வைப்பவை. ஞானம் எனும் அறிவு முதிர்ச்சி, வேறு கோணத்தில் உலகைப் பார்த்தல் மற்றும் காரணக் காரியங்களை அறிதல் என்பவையே அவை.

Continue reading “கண்டனூர் நாகலிங்கய்யா – வேதாந்தக் கவிஞர்”

எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது

எழுத்தாளர் பாரதிசந்திரன்

எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய ‘படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்‘ எனும் நூல், பொதிகை மின்னல் கலைக்கூடம் வழங்கும் சிறந்த கட்டுரை நூல் விருது பெற்றது.

விருது பெற்ற எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.

Continue reading “எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது”