அவலோகிதம் – யாப்பு மென்பொருள்

அவலோகிதம்

அவலோகிதம் – தமிழின் அசாத்தியமான, அதோடு மிகச் சிறப்பான யாப்பு மென்பொருள் ஆகும்.

உள்ளிடப்பட்ட உரையினைத் தமிழ் யாப்பு விதிகளின் படி ஆராய்ந்து – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புக்களை கணக்கிட்டு, இவற்றைக்கொண்டு உள்ளீட்டின் பாவகையினைக் கண்டறிந்து, மேற்கூறிய யாப்புறுப்புகளையும் பாவிதிகளின் பொருத்தத்தையும் வெளியிடும்.

இதில் யாப்பிலக்கணம் கற்கவும் வழி உள்ளது. கீழ்க்கண்ட பாவகைகளை அவலோகிதம் கண்டுகொள்ளும் திறனையும் கொண்டது ஆகும்.

Continue reading “அவலோகிதம் – யாப்பு மென்பொருள்”

இ பேப்பர் லேண்ட்

இ பேப்பர் லேண்ட்

உலக இலக்கியம் மற்றும் செய்தி படிக்கத் தேட வேண்டிய அருமையான தளம் “இ பேப்பர் லேண்ட்” இணையதளமாகும்.

இன்று மக்கள் அனைவரும் அனைத்துச் செய்தித்தாள்களையும் படிக்க அவர்களுக்கு நேரம் ஒத்துழைப்பதில்லை. விரைவு வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறார்கள்.

அவ்வாறு இருக்கும் சமயத்தில் இணையத்தில் ஒரே இடத்தில் படிக்க இத்தளம் மிகப்பெரும் வசதியைச் செய்துள்ளது. அனைத்து மொழிகளில் வரும் செய்தித்தாள்களைப் படிக்க ஏதுவாக இது உள்ளது.

Continue reading “இ பேப்பர் லேண்ட்”

வினவு – தமிழின் புரட்சித் தளம்

வினவு

தமிழில் புரட்சியையும், அறிவு விழிப்புணர்ச்சியையும் தருவதற்கென உள்ள சிறந்த தளம் ”வினவு” ஆகும்.

மாற்றுச் சிந்தனைவாதிகளின் தர்க்க ரீதியான கருத்துக்களும், இன்றையச் சமூகத்தின் இழிநிலையைக் கண்டு கொதித்தெழும் அறிஞர்களின் கோபங்களும் இங்கு, நமக்கான விடிவிற்காக தீபமென எரிந்து கொண்டிருக்கின்றன.

Continue reading “வினவு – தமிழின் புரட்சித் தளம்”

அரூ – நவீனத்தைத் தூக்கி நிறுத்தும்

அரூ

தமிழ் இணையஇதழ்களில் நவீனத்தைத் தூக்கி நிறுத்தும் மிகச்சிறந்த இணைய இதழ் அரூ ஆகும். இவ்விதழ் (aroo.space) மட்டும் படித்தாலே போதும். தமிழின் இன்றைய உயரம் தெளி(ரி)ந்து விடும். படிக்கப் படிக்க நீங்களும் இலக்கியத்தில் உயர்வீர்கள். தமிழும் உங்களோடு உயரும்.

அரூ – என்ன? எதற்கு? அவர்கள் மொழியில்…

”அரூ என்பது ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். முடிவிலா காலமும், வெளியுமற்ற பரப்பில் பறந்து திரிகிற அரூபமான மனித மனம்தான், அத்தனை மொழிகளையும், கலைகளையும், தத்துவங்களையும், உருவங்களையும் நமக்குத் தருவித்துத் தந்திருக்கிறது.

Continue reading “அரூ – நவீனத்தைத் தூக்கி நிறுத்தும்”

பதிவுகள் – பன்னாட்டு இணைய இதழ்

பதிவுகள்

உலகத்தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியம் பேசும், நவீன முன்னெடுப்புகளான தமிழின் பல்வேறு வடிவங்களைப் பதிவு செய்யும் இணைய இதழ் தான், பதிவுகள் – பன்னாட்டு இணைய இதழ்!

இத்தளத்தின் ஆசிரியர் வ.ந.கிரிதரன் ஆவார். இவர் சிறந்த இலக்கியவாதி, திறனாய்வாளர், வரலாற்றாலாளர், இதழாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.

இவரின் சீரிய முயற்சியில் 2000 லிருந்து தொடர்ந்து இவ்விதழை நடத்தி வருகிறார்.

Continue reading “பதிவுகள் – பன்னாட்டு இணைய இதழ்”