நீரோடையான இலக்கியம் – நீரோடை.காம்

நீரோடை.காம்

”வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்” எனும் தலைப்புடன் இயங்கும் நீரோடை.காம் தளம் அவ்வார்த்தைகளுக்குத் தக, சிறப்புடன் காணப்படுகிறது.

பல சிற்றாறுகள் இணைந்து பெரிய நீரோடையாகக் கட்டுக்கடங்காமல் ஓடுவதைப்போல, பல இலக்கிய வடிவங்களுடன் இணைந்து புதிய வடிவ அமைப்புடன் சிறக்கிறது இத்தளம்.

Continue reading “நீரோடையான இலக்கியம் – நீரோடை.காம்”

சிறுகதைகளின் சங்கமம் – சிறுகதைகள்.காம்

சிறுகதைகள்.காம்

படிப்பவருக்கு இன்பத்தையும் மறக்கமுடியாத உணர்வுகளையும் தரவல்லது சிறுகதையாகும். அதை மட்டுமே முழுக்க முழுக்கத் தரும் இணையதளம் சிறுகதைகளின் சங்கமம் என்றே சொல்லக்கூடிய www.sirukathaigal.com ஆகும்.

“கதை ஆசிரியனின் சிந்தனையில் பிறந்து, வாசகர்களின் சிந்தனையில் நிறைவு பெறுவது சிறுகதையாகும்.

Continue reading “சிறுகதைகளின் சங்கமம் – சிறுகதைகள்.காம்”

தமிழ் பொக்கிசம் – சித்தன்.ஓஆர்ஜி

சித்தன்.ஓஆர்ஜி

பக்தி, யோகம், ஞானம், தமிழ், சித்தர் இலக்கியம் ஆகிய அனைத்தும் கூட்டுக் கலவையாக  நிறைந்திருக்கும் ஓர் அற்புதமான இணையதளம் இதுவாகும்.

மிகச்சிறந்த கலைப் பொக்கிஷமாக, அறிவுப் பொக்கிஷமாகத் தேடுகிற எல்லாவற்றையும் தருகிற களஞ்சியமாக விளங்குகின்ற ஒரு இணைய தளம் தான் ”சித்தன்” எனும் இந்த இணையதளம் ஆகும்.

Continue reading “தமிழ் பொக்கிசம் – சித்தன்.ஓஆர்ஜி”

இனிய எளிய தமிழில் கணினி தகவல்

இனிய எளிய தமிழில் கணினி தகவல்

தமிழில் மிக அருமையான வலைப்பூவாக vikupficwa.wordpress.com என்ற‌ தளம் விளங்குகிறது.

கணினி அறிவு என்பது பொதுவாக அனைவருக்கும் இக்காலத்தின் தேவையான ஒன்றாகிறது. ஆனால் இதைப் பெற அதிகப்படியானவர்கள் கடினப்படுவதில்லை. தேடுவதில்லை.

Continue reading “இனிய எளிய தமிழில் கணினி தகவல்”

தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி

தமிழ்ச்சரம்

பல வண்ண மலர்களைத் தொடுத்துக் கட்டும் மாலையைச் சரம் என்று கூறுவர். கண்களுக்கு விருந்தையும், நுகர்வதற்குப் பலவித மனத்தையும் தருவது ’சரம்’ ஆகும்.

மலரைச் சுற்றும் வண்டுகளும் தேனீக்களும் ரீங்காரமிடும். அது காதுகளுக்கு ஓசையோடு இனிமை தரும். மலர் ஸ்பரிசத்தில் சுகமானது. ஆக, நம் புலன்களில் நான்கினுக்கும் சரம் தீனி போடுகிறது.

தமிழ்மொழி இணையதளங்கள், இன்று தமிழ்மொழியை வளர்க்கும் காரணிகளில் ஒன்றாகும். அவை காலத்தின் அதீத வளர்ச்சியால் விளைந்தவை.

Continue reading “தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி”