நாணயம் சுண்டுதல், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், குழுத்தலைவன், நாணயம் சுண்டுதல், இடைவேளை நேரம் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

1. ஆட்டத்தைத் தொடங்க, நாணயம் சுண்டுவதில் உள்ள முறை யாது?

இரு குழுத் தலைவர்களும், இந்த நாணயம் சுண்டும் வாய்ப்பில் (Toss) பங்கு பெறுவார்கள்.

அவர்கள் ஆட்டம் தொடங்கக் குறித்திருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக விளையாட்டு மைதானத்திற்குள் சென்று, நாணயம் சுண்டிவிட்டு, ஆடும் வாய்ப்பினைப் பற்றி முடிவு கூறுவார்கள். Continue reading “நாணயம் சுண்டுதல், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்”

கிரிக்கெட் பந்து, விக்கெட், எல்லைக்கோடு

கிரிக்கெட் பந்து

1. கிரிக்கெட் பந்து – அதன் கனமும் சுற்றளவும் எவ்வளவு?

சிவப்பு நிறமுள்ள கிரிக்கெட் பந்தின் கனம் 156 கிராமுக்குக் குறையாமலும், 163 கிராமுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தக்கையாலும், தோல் மற்றும் முறுக்கேறிய நூல்களாலும் ஆன அதன் சுற்றளவானது, 8 ¾ அங்குலத்திற்குக் குறையாமலும், 9 அங்குலத்திற்கு மேற்படாமலும்  அமைந்திருக்க வேண்டும்.

கிரிக்கெட் பந்து சிவப்பாக இருக்க வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடவில்லை என்றாலும் பந்துக்கு சிவப்பு நிறம் என்றே எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகி இருக்கிறது. Continue reading “கிரிக்கெட் பந்து, விக்கெட், எல்லைக்கோடு”

கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் – முன்னுரை

கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில்

கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் என்ற புத்தகம் திரு.எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் எழுதி ராஜ்மோகன் பதிப்பகம் பதிப்பித்த ஒரு நல்ல நூல் ஆகும்.

நாட்டுடைமையாக்கப்பட்ட இந்த நூல் பலருக்கும் பயன்படும் என்பதால், இனிது இதழில் பல கட்டுரைகளாகப் பதிக்கப்பட உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு பற்றிய விபரங்களைத் தமிழில் உருவாக்கித் தந்த நவராஜ் செல்லையா அவர்களுக்கு இனிது தலை வணங்குகிறது.

எஸ்.நவராஜ் செல்லையா (பிறப்பு 1937 – இறப்பு 2001) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

இவரைப் பற்றி மேலும் அறிய இவரது விக்கிபீடியா பக்கத்தைப் பார்வையிடவும்.

எஸ்.நவராஜ் செல்லையா

Continue reading “கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் – முன்னுரை”

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் சொன்ன சொல். இன்றும் நமக்கு வழிகாட்டும் அற்புத சொல் அது.

வளமான வாழ்வுக்கு நலம் நிறைந்த உடல் வளம் தேவையாகும். உடலைப் பேணினால் உயிரைப் போற்றியதாகும். உடலை வளர்த்தால் தான் உள்ளத்தை வளர்க்க முடியும்.

உயர்ந்த உள்ளம் என்னும் கட்டிடம் எழுப்பச் சிறந்த உடல் என்ற அடித்தளம் இன்றியமையாதது.

இயந்திரம் பழுதடையாதவாறு எண்ணெய் இட்டும் துப்புரவு செய்துக் காத்துப் பேணும் நாம் உடல் வளத்தையும் மனநலத்தையும் கருத்தாகப் போற்ற வேண்டும். Continue reading “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

வியர்வை அறிவியல்

வியர்வை

நமது உடலிலிருந்து வியர்வை வெளியேறுவது ஒரு சாதாரண செயலாக நமக்குத் தோன்றலாம்; ஆனால் அதன் பின் இருக்கும் அறிவியல் பிரம்மாண்டமானது.

நமது உடலில் சுரக்கும் ஒரு துளி வியர்வையை மட்டும் வைத்து, நமக்கு இருக்கும் உடல் உபாதைகளை கண்டறிவது சாத்தியமே! Continue reading “வியர்வை அறிவியல்”