பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள பழக்கமாகும். பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர்.