போற்றித் திருத்தாண்டகம்
போற்றித் திருத்தாண்டகத்தின் ஒவ்வொரு அடியில் போற்றி என முடிவதால் இது போற்றித் திருத்தாண்டகம் என்று அழைக்கப்படுகிறது. சைவ சமய குரவர்களுள் (அடியார்கள்) ஒருவரான திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் பெருமான் தனது வயது முதிர்ந்த நிலையில் இறைவனைக் காணும் பொருட்டு திருக்கைலாயம் செல்ல விருப்பம் கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.