தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் தேர்தல் பணியை

தேர்தல் பணி ஒரு சவாலான பணி. சில அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டால் தேர்தல் பணியை எளிதாக்கலாம். கட்டுரை அவற்றை விளக்குகிறது.

அன்பார்ந்த இனிது மின்னிதழ் வாசகர்களுக்கு வணக்கம்.

தேர்தலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பது மக்களாட்சி முறையில் மிக முக்கியமான பொறுப்பு. நமது அரசு ஊழியர்கள் மிகச் சிறப்பாகத் தேர்தலை நடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு மக்களின் சார்பாக வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையில் ஓர் ஆசிரியராகவும், வாசகனாகவும், என் கருத்துக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Continue reading “தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்”

நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்

நீரின் உறைதிறன்

ஒரு ஆய்வகத்தினுள் நுழைந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் ஒரு விஸ்தாரமான ஆய்வக அறை இருந்தது. அங்கிருந்த ஒரு ஆராய்ச்சியாளர் என்னை இன்முகத்துடன் வரவேற்றார்.

நானும் இன்முகத்துடன் அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதனை அடுத்து ஒரு மேசையில் இருந்த கருவியை அவர் எனக்கு காண்பித்தார். ஆர்வமுடன் அதனை நான் பார்த்தேன். அந்தக் கருவி ஏதோ ஒரு பெட்டி மாதிரித்தான் இருந்தது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்”

அறப்பணியாளர்களின் அவலம்

அறப்பணியாளர்களின் அவலம்

பாவம் செய்து விட்டோமா

ஆசிரியராக உயர்ந்து?

தணியாத கொரானா தாக்கத்தால்

தனியாகத் தவிக்கிறோம் தாகத்தோடு

தனியார்பள்ளி ஆசிரியர்கள்

Continue reading “அறப்பணியாளர்களின் அவலம்”

படைப்புலகின் நடுநாயகமான நடு

நடு

பிரான்ஸில் இருந்து வெளியாகும் கலை இலக்கிய இணையச் சிற்றிதழ் நடு ஆகும். படைப்புலகின் நடுநாயகமான நடு இணையற்ற படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

“கலையில் உண்மையுண்டு; உண்மையெல்லாம் கலை அல்ல”எனும் தாரக மந்திரத்துடன் மிக அருமையான இணைய இதழாக இவ்விதழ் வெளிவருகிறது.

Continue reading “படைப்புலகின் நடுநாயகமான நடு”

களிப்பூட்டும் கடற்கரை

களிப்பூட்டும் கடற்கரை

கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்

காற்று தரும்சுகம் நாடிடுவோம்

படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி

பறந்திட உடல்வளம் கூடிடுவோம்

Continue reading “களிப்பூட்டும் கடற்கரை”