கொள்ளு மிளகு பொடி செய்வது எப்படி?

கொள்ளு மிளகு பொடி

கொள்ளு மிளகு பொடி சுவையான பொடி வகை ஆகும். இதனை சுடுசாதத்தில் நெய்யுடன் சேர்த்து உண்ண சுவை மிகும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கும் இதனை தொட்டுக் கொள்ளலாம்.

கொள்ளு உடலுக்கு வலிமையைத் தருவதுடன் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடலினை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கொள்ளினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம் ஆகம்.

Continue reading “கொள்ளு மிளகு பொடி செய்வது எப்படி?”

அமர்நீதி நாயனார் – ஆடையும் ஐந்தெழுத்தும்

அமர்நீதி நாயனார்

அமர்நீதி நாயனார் சிவனடியாரின் கோவணம் இருந்த தராசுத் தட்டை சமநிலைப்படுத்தத் தானே துலாக்கோலில் ஏறிய வணிகர்.

சிவனும், சிவனடியார்களும் சமமான நிறை உடையவர்கள் என்பதை அமர்நீதியாரின் கதை மூலம் தெரிந்து கொள்ளலாம். விரிவாகத் தெரிந்து கொள்ள கதையைத் தொடருங்கள்.

Continue reading “அமர்நீதி நாயனார் – ஆடையும் ஐந்தெழுத்தும்”

நீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி

நீருடன் ஓர் உரையாடல் 3 - பனிக்கட்டி

பூமியின் துருவப் பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் விளைவுகளை, ஓர் அறிவியல் இணைய இதழில் வாசித்துக் கொண்டிருந்தேன்.

அதில் வெண்ணிறப் பனிப்பாறைகள் நீரில் மிதக்கும் படியான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அப்பொழுது அதிலிருக்கும் இயற்கை அறிவியல் என் சிந்தனையை தூண்டியது.

பனிப்பாறைகளும் நீர் மூலக்கூறுகளால் தான் ஆக்கப்படிருக்கின்றன. ஆனால் அவை திடநிலையில் இருக்கின்றன. இதற்கு காரணம், வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியசை அடைய, திரவ நீர் திடநிலைக்குச் செல்கிறது.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி”

விரிந்த தளம் கொண்ட வலம்

வலம்

மாத இதழாக வெளிவரும் வலம் இதழின் பொறுப்பாசிரியர்களாக அரவிந்தன், நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா ஆகியோர் உள்ளனர்.

80 பக்கங்களுடன் கருப்பு ‍வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவருகிறது.

வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கிறது.

சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்குவதை நாம் காணலாம்.

Continue reading “விரிந்த தளம் கொண்ட வலம்”