பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் பத்தாவது பாடல் ஆகும்.

உமையொரு பாகமாக விளங்கும் இறைவரான சிவபெருமான் மீது,  தென்பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகரால்  திருவெம்பாவைப் பாடல் பாடப்பட்டது. Continue reading “பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்”

சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

குருவிகள் எல்லாம் வந்த வழியே மீண்டும் பயணித்துக் கொண்டிருந்தன.

சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்பு மீண்டும் அந்த மனித குடியிருப்புகள் தென்பட்ட பகுதியினை வந்தடைந்தது குருவிக் கூட்டம்.

“அந்த ஏரி எங்காவது தென்படுகிறதா?” என இருன்டினிடே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. மற்ற குருவிகளும் அவ்வாறே ஏரியை தேடிக் கொண்டிருந்தன. Continue reading “சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு”

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்

கவிஞர் வீரமணி அவர்களின் ஓர் அருமையான கவிதையை முதலில் நம்மை படிக்கச் சொல்லுகிறார் இக்கட்டுரை ஆசிரியர். அதன்பின் ஒரு கவிதை படிக்கும் போது எத்தகைய தடுமாற்றம் நம்மை ஆட்கொள்கிறது என விளக்குகிறார். இதனை வாசித்தபின் நீங்கள் கவிதையை ரசிக்கும் முறையே மாறிவிடும்.

கண்ணற்றவன்

பார்த்துப் புளித்த பிரபஞ்சம்
யாராரோ மென்று துப்பிய – வார்த்தைகள்
எனதென்று புதிதாய் எழுத எதுவுமில்லை என்பதால்

நான்
வீடற்றவன் ஜன்னல் வழி
கண்ணற்றவன் – கவிதைகளைத் திருடி
முகமற்றவனிடம தந்தேன்…

அவன் வாசிக்காமலேயே
சிலாகிக்கிறான்… Continue reading “ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்”

ஏன் பாஸ் ஆனாய்? – சிறுகதை

ஏன் பாஸ் ஆனாய்

“அம்மா, நீ ஏன் பாஸ் ஆனாய்?” என்றாள் நான்கு வயது மலர் தன் தாய் மங்கையை மலங்க பார்த்தபடி.

“ஏன்டா, என் கன்னுக்குட்டி? நீ என்ன சொல்ற. அம்மாக்கு புரியல.” Continue reading “ஏன் பாஸ் ஆனாய்? – சிறுகதை”