பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை

பூசணி விதை

பூசணி விதை உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைய‌ கொண்டுள்ளது. இந்த சிறிய விதைக்குள் உள்ள அபரிதமான சத்துக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் நண்பன் கொடுத்து இதனை தின்றிருக்கிறேன். அவனுடைய அம்மா சமையலுக்கு வாங்கிய பூசணிக்காயில் இருந்த விதைகளை, விறகு அடுப்பு சாம்பலில் தோய்த்து உலர வைத்துப் பதப்படுத்தியதாகக் கூறினான். லேசான இனிப்புச் சுவையுடன் அருமையாக இருந்தது.

Continue reading “பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை”

பால்பன் செய்வது எப்படி?

பால்பன்

பால்பன் தித்திப்பான இனிப்பு வகை ஆகும். கடைகளில் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டு, மேலே கெட்டியாக படிந்துள்ள சர்க்கரை பாகினை பார்க்கையிலேயே, அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்.

பொதுவாக இதனைச் செய்வதற்கு மைதாவே பயன்படுத்துவர். இந்த பதிவில் மைதாவிற்கு பதில் கோதுமை மாவினைக் கொண்டு பால்பன்னைத் தயார் செய்துள்ளேன்.

இனி சுவையான பால்பன்னினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பால்பன் செய்வது எப்படி?”

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

கோழி சிலம்ப சிலம்பும் குருகு எங்கும்

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் எட்டாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை தென்பாண்டி நாட்டைச் சார்ந்த திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், உலக உயிர்களின் அறியாமை இருளினை நீக்கும் இறைவனான சிவபெருமானின் மீது பாடப்பட்டது. Continue reading “கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்”

சொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்

தாயகம் தாண்டிப் பயணம்

பயணம் துவங்கி ஆறாவது நாள்.

மாலை நேரத்தில் அந்த மரத்திலிருந்து புறப்பட்ட குருவிக் கூட்டம் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தது.

குருவிகள் எல்லாம் உற்சாகமாய் இருந்தன.

ஒரு குருவி பாடல்களை பாடியது. அப்பாடல்கள் நீதியினை போதிக்கும் வகையில் இருந்தன. இனிமையான குரலில், நற்கருத்துகளையும் கேட்டு குருவிகள் எல்லாம் மகிழ்ந்தன. Continue reading “சொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்”

தப்பு – சிறுகதை

தப்பு

நோக்கெல்லாம் அந்த நவ்வாப் பாட்டிய பத்தி  இது வரைக்கும் நான் சொன்னதில்லைல. இப்ப சொல்றேன் கேளுங்கோ.

நான், ராமு, கிச்சா- நாங்க மூணு பேரும் தான் எப்பவும் ஒண்ணா இருப்போம். அவா ரெண்டு பேரும் எங்க அக்ரஹாரத்தில தான் இருக்கா. Continue reading “தப்பு – சிறுகதை”