வழிகாட்டுதல் ‍- சிறுகதை

வழிகாட்டுதல்

குழந்தைகளுக்கு, எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் வேண்டும்.

பெற்றோர்களில் சிலர், சூழ்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள, குழந்தைகளை நேரடியாகப் பழக்குவது இல்லை.

ஒரு சூழ்நிலையில் நடந்து கொள்ளச் சொல்லும்விதம், மற்றொரு சூழ்நிலைக்குப் பொருந்துவது இல்லை.

ஆதலால் எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று , குழந்தைகளுக்கு நன்கு விளக்கிப் புரிய வையுங்கள். Continue reading “வழிகாட்டுதல் ‍- சிறுகதை”

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிநன்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் பதினெட்டாவது பாசுரம் ஆகும். Continue reading “உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன்”

கல்விக் கோயில் – சிறுகதை

கல்விக் கோவில்

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. ஊரே ஒன்றாகக் கூடியிருந்தது. வேர்விட்டு, விழுதுவிட்டு நின்ற மரத்தின் நிழலில் ஊர் பெரிய மனிதர்களும், மக்களும் சலசலவெனப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஊர்த்தலைவர் ஆவுடையப்பர் பேச தொடங்கினார்.

“இங்க பாருங்கப்பா, கொஞ்சம் நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. நம்ம ஊர தத்தெடுத்து பல நன்மைய செய்யிற அமெரிக்காவைச் சேந்த செல்வந்தர் டக்சன் அய்யா, இந்த முற பெரிய தொகையை அனுப்பியிருக்காரு.

அந்த தொகையை வச்சி ஊருக்கு என்ன நன்மைய செஞ்சிக்கலாமுன்னு எல்லோரும் சேந்து முடிவெடுக்கத்தான் கூடியிருக்கோம். ஆளுக்கொரு வசதியச் சொல்லுங்கப்பா.” Continue reading “கல்விக் கோயில் – சிறுகதை”

முளைப்பாரிப் பாடல்

முளைப்பாரி பாடல்

தன்னா னன்னே னானே தன

தானே னன்னே னானே

 

ஒண்ணாந்தான் நாளையிலே

ஒசந்த செவ்வா கிழமையிலே

ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து

ஓடும் பிள்ளை தொண்டலிட்டு Continue reading “முளைப்பாரிப் பாடல்”

ரத்தன் டாடாவின் வரிகள்

ரத்தன் டாடாவின் வரிகள்

ரத்தன் டாடாவின் வரிகள் எளியவை; இனியவை.

ரத்தன் நோவல் டாடா இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்.

அவர் இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து சில நல்ல வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பயன் பெறுங்கள்.

 

உங்கள் குழந்தைகளை பணக்காரனாக இருக்க வேண்டும் என்று கூறாமல், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறி வளருங்கள்.

அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில், ஒரு பொருளின் விலையைப் பார்க்காமல், அதனுடைய மதிப்பினை உணர்வார்கள். Continue reading “ரத்தன் டாடாவின் வரிகள்”